புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2012


விடுதலைப் புலிகளை வவுனியாவில் நேரில் சந்தித்தார், இந்திய ராணுவ தளபதி 


இந்த வகையில், வவுனியாவுக்கு இன்று விஜயம் செய்தார் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங். அவரை வரவேற்ற வவுனியா ராணுவத் தளத்துக்கான ராணுவத் தளபதி தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்படும் புனர்வாழ்வுப் பயிற்சிகள்,
புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் வழங்கப்பட்டு வருகின்ற சுயதொழில் வாய்ப்புக்கான உதவிகள் ஆகியவை பற்றி விளக்கம் அளித்தார்.இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், இன்று வவுனியாவில் அமைந்துள்ள ராணுவத் தளத்துக்கு விஜயம் செய்தார். அங்கே, முன்னாள் விடுதலைப் புலிகளை சந்தித்து கலந்துரையாடினார் அவர். இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவது குறித்து தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்கள் குறையாத நிலையில், இந்திய ராணுவத்தின் பிரதான தளபதி ஜெனரல் பிக்ரம் சிங், கடந்த புதன் கிழமை கொழும்பு சென்று இறங்கியிருந்தார். அவரது 3 நாள் இலங்கை விஜயத்தின்போது, இலங்கையின் வட பகுதியில் அமைந்துள்ள வவுனியாவுக்கு விஜயம் செய்வதும், அங்கு முன்னாள் விடுதலைப் புலிகளை சந்திப்பதும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டிருந்தன.
மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, “கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது, ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு, இந்த புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் முடிவடைந்த பின்னர், கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்” என்று விளக்கமளித்தார். இதனையடுத்து, பூந்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையத்தையும் இந்திய ராணுவத் தளபதி பார்வையிட்டார். அங்கு தையல் பயிற்சிகள் வழங்கப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர்களுடனும் உரையாடினார்.

ad

ad