புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2012


தண்ணீர் தேவை எவ்வளவு? தமிழ்நாடு, கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி


தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கு உடனடியாக எவ்வளவு தண்ணீர் தேவை என்பது குறித்து நாளை சனிக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை
விசாரணைக்கு வந்தபோது, இரு மாநில முதலமைச்சர்களும் நேரடியாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்று உச்சீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று வியாழக்கிழமை பெங்களூர் சென்று கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரைச் சந்தித்துப் பேசினார். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வழககு விசாரணை இன்று நடைபெற்றது. துவக்கத்திலேயே, இரு மாநில முதல்வர்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தை அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இருந்ததா அல்லது அர்த்தமற்ற பேச்சுவார்த்தையாக இருந்ததா என்று நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் கொண்ட அமர்வு கேள்வி எழுப்பியது.
அந்தப் பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் கிட்டவில்லை என்றும், கர்நாடகம் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என மறுத்துவிட்டதாகவும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழகக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், இரு மாநிலங்களுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது, தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடிப் பயிர்கள் கருகும் நிலையில் இருப்பதாகவும், குறைந்தபட்சம் 30 டிஎம்சி தண்ணீர் தேவை என்று கர்நாடக அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்ததையும் வைத்திநாதன் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், கர்நாடகத்தில் நான்கு அணைகளிலும் சேர்த்து 37 டிஎம்சி மட்டுமே இருப்பதாகவும், ஆனால், பாசனம் மற்றும் குடிநீர் சாகுபடிக்கு 78 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும் கர்நாடக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் புள்ளிவிவரங்கள் இப்போது தேவையில்லை என்று கூறிய நீதிபதிகள், குறைந்தபட்சம் தண்ணீர் தேவை எவ்வளவு என்பதை இரு மாநில அரசுகளும் நாளைக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 3-ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.BBC

ad

ad