புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012

கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
மேன்செஸ்ட்டரைச் சேர்ந்த 27 வயது ரூனிக்கு ஐரோப்பிய ஒன்றிய கால்பந்தாட்டக் கழகம் 2011ம் ஆண்டு ஒக்ரோபரில் நடந்த விளையாட்டின் போது விதித்த தடை அவரது வேண்டுகோளுக்கிணங்க தளர்த்தப்பட்டது.
இதன்படி ரூனி சுவிட்சர்லாந்தில் வாட் மாநிலத்தில் உள்ள நியோன் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியக் கால்பந்தாட்டக் கழகத்திற்கு நேரில் போய் தண்டனை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டினார்.
நேற்று முன்தினம், இங்கிலாந்திலிருந்து சுவிட்சர்லாந்து வந்த ரூனி பெயெர்னே நகருக்கு வந்து இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
அப்போது அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்ததாகவும், பயிற்சியின்போது பந்தை இலக்கு எல்லைக்கு அப்பால் உதைத்த ஓர் இளைஞருக்கு ரூனி தனது இந்த வருட வருமானத்தைப் (15 மில்லியன் பவுண்டு) பரிசாகக் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்னொரு வீரருக்கு ரூனி காலணிகளை பரிசாக அளித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ad

ad