புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

 பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.
மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று பாராளுமன்றதில் பாரதீய ஜனதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடந்தது. 545 உறுப்பினர்கள்

கொண்ட மக்களவையில், பெரும்பான்மையை நிரூபிக்க 273 வாக்குகள் தேவை. ஆனால், 43 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததையடுத்து, அது 251 ஆக குறைந்தது.

இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரித்து 218 பேரும், எதிர்த்து 253 பேரும் ஆக மொத்தம் 471 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் பா.ஜனதா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து மத்திய அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது பேஸ்புக் வலைதள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி குறித்து பாராளுமன்ற மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் குறைந்த அளவிலான 35 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றிப்பெற்றுள்ளது. இது ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஒரு மைனாரிட்டி அரசு என்றே காட்டுகிறது. இது ஒரு வெட்கப்படவேண்டிய விஷயம். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அது ஒரு மைனாரிட்டி அரசு என்பதை நிரூபித்து இருக்கிறது.

271 வாக்குகள் பெற்று பெரும்பான்மையை நிரூபித்து இருக்கவேண்டும். ஆனால் சில சுயநல அரசியல்வாதிகளின் எடுத்த முடிவால் அரசு 253 வாக்குகள் பெற்று தனது ஆதரவை நிரூபித்து உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதனால் மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. நேர்மையான வெற்றியை பெற அவர்கள் மக்களை சந்திக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ad

ad