புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


தமிழ்நாடு சந்தித்த மூன்று விழாக்கள்: ஜெயலலிதா உரை 
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா பேரவை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.




முதல்வர் ஜெயலலிதா விழாவில் பேசும்போது,  ‘’சென்னையின் 300-ம் ஆண்டு விழா, சென்னை உயர்நிதி மன்றத்தின் 150-வது ஆண்டு விழா, தமிழ்நாடு சட்டசபையின் 60-ம் ஆண்டு விழா ஆகிய 3 விழாக்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது.








மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டிருந்தார். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்படி வங்காளதேச கவர்னர் 3 மாகாணங்களின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.


1833-ம் ஆண்டு சட்டத்தின்படி அனைத்து சட்ட அதிகாரங்களும் கவர்னர் ஜெனரலிடம் வழங்கப்பட்டிருந்தது. 1853-ம் ஆண்டு சட்டத்தின்படி 12 உறுப்பினர்கள் கொண்ட சபை,  சட்டங்கள் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றது.


1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம், சட்டமன்றங்கள் அமைய வழிவகுத்தன. இதன்படி சென்னை மாகாணத்தின் மேல்சபைக்கு, அமைதியான, நல்ல அரசு இயங்க சட்டங்கள் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் நிதிநிலைமை பற்றி விவாதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பவும் 1892-ல் அந்த சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அப்போது இச்சபையில் அங்கம் வகித்தவர்கள் 2 ஆண்டுகள் பதவியில் நீடிக்கும் வகையில் பதவிக்காலம் அமைக்கப்பட்டிருந்தது.


1909-ம் ஆண்டு (மின்டோ-மோர்லி சீர்திருத்தம்) சட்டத்தின்படி, மெட்ராஸ் மேல்சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20-ல் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ்தான் மெட்ராஸ் மேல்சபை அமைந்தது.


1935-ம் ஆண்டு, இந்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ் 1937-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் 1937, ஜூலை மாதம் முதல் மெட்ராஸ் சட்டமன்றம் அமைந்தது. 1937-ல் அமைந்த காங்கிரஸ் அரசு, இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை காரணமாக 1939-ம் ஆண்டு ராஜினாமா செய்தது.


தற்போதைய தமிழ்நாடு மாநிலம் 1956-ல் உருவானது. சட்டசபையானது, தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதையடுத்து, தற்போதைய 14-வது சட்டப்பேரவை 2011-ம் ஆண்டு மே மாதம் 16-ம்தேதி அமைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு பெற்ற சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ளது.


கண்ணியம் மற்றும் கம்பீரம் வாய்ந்த இந்த சட்டமன்ற அரங்கில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த மன்றத்தினை பல தலைவர்கள் அலங்கரித்திருக்கின்றனர்.


 இந்த மாளிகையின் பாரம்பரியத்தின் புனிதத்தை பாதுகாக்க உதவிய பேரவைத் தலைவர்களின் பட்டியல் மிக நீளம். இத்தகைய சிறப்புமிக்க பேரவை அரங்கத்தை 1922-ம் ஆண்டு சென்னை மாகாண கவர்னராக இருந்த விலிங்டன் அவரது மனைவி லேடி விலிங்டன் ஆகியோர் வழங்கினர். விலிங்டன், சபாநாயகராக இருந்த பிராண்டின் பேரன் என்பது சுவாரஸ்யமான தகவல்.


ஜனாதிபதி, ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்திருக்கும் இந்த வைர விழா, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் மற்றொரு மைல் கல்லாக அமையும்’’ என்று தெரிவித்தார்.



ad

ad