புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012

தயாநிதிக்காக தடை போடும் மத்திய  அரசு-அ  தி மு க மைத்ரேயன் பேட்டி
 சென்னையில் டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம் செட் ஆப் பாக்ஸ்களை தொலைக் காட்சி நேயர்களுக்கு யார் வழங்குவது என்பதில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத் திற்கும் சன் டி.வி. நெட்வொர்க்கின் சுமங்கலி கேபிள் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் மோதல் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித் திருக்கிறது. மக்களவையில் தம்பிதுரையும்,
மாநிலங்களவையில் மைத்ரேயனும் இந்த பிரச் சினையில் மத்திய அரசை குற்றம் சாட்டி பேசியிருக் கிறார்கள். கேபிள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுத்தத்தில் என்ன நடக்கிறது என அ.தி.மு.க.வின் மாநிலங்களவை குழுத் தலைவர் மைத்ரேயனை சந்தித்துக் கேட்டோம்.

காவிரி, மின்சாரம் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் தமிழகத் தின் சார்பில் கேள்விகள் கேட்கப்படும். அந்த வரிசையில் இந்த செட் டாப் பாக்ஸ் விஷயம் இடம் பெற்றது எப்படி?

மைத்ரேயன்: தமிழகத்தில் கேபிள் டி.வி. நடத்துவதில் முன்னணி நிறுவனமாக இருந்துவரும் சன் டி.வி.யின் சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள்தான் இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாக வருவதற்கான அடிப்படை காரணம். அந்த சுமங்கலி நிறுவனத்திற்கும் தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கும் நடைபெறும் போட்டியில் மத்திய அரசு சுமங்கலிக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்துதான் இந்திய பாராளுமன்றத்தில் நாங்கள் குரலெழுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.


தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் கேபிள் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருவ தாக சொல்லப்படும் அரசு கேபிள் நிறுவனம் சென் னைக்குள் நுழைந்ததும் பிரச்சினைகள் வந்தது ஏன்?

மைத்ரேயன்: தமிழக அரசு கேபிள் நிறுவனத்தை துவக்கிய ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சிதான். அவர்கள் இதே சுமங்கலி நிறுவனத்திற்கெதிராக தான் அரசு கேபிள் நிறுவனத்தை தொடங்கினார்கள். சென்னை நகரில் கேபிள் டி.வி. நடத்த வேண்டுமென் றால் கண்டிஷனல் ஆக்சஸ் சிஸ்டம் (ஈஆந) என்கிற செட் டாப் பாக்ஸ் மூலம் தான் ஒளிபரப்பு செய்யவேண் டும் என மத்திய அரசு அப்பொழுது கண்டிஷன் போட்டிருந்தது. அதன்படி தி.மு.க. அரசு மத்திய தகவல் ஒளி பரப்பு அமைச்சகத் திடம் சி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸில் அரசு கேபிள் டி.வி.யை ஒளிபரப்ப 2008-ம் ஆண்டு அனுமதி வாங்கியது. அதன்பிறகு சுமங்கலியை நடத்தும் மாறன் சகோதரர்களுக்கும் தி.மு.க.வுக்கும் நடந்த சண்டை முடிவுக்கு வந்தது. உடனே அன்றைய தி.மு.க. அரசு அரசு கேபிள் டி.வி.யை தூக்கிப் போட்டுவிட்டது.

தி.மு.க.வை தோற்கடித்து வெற்றிபெற்ற அ.தி.மு.க. அரசு மறுபடி யும் தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு உயிர்கொடுத்து நடத்த ஆரம்பித்தபோது மத்திய அரசு ஒரு புதிய சட்டதிருத்தத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. சி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம் என்கிற டி.ஏ.எஸ். செட் டாப் பாக்சுகள் மூலம்தான் சென்னையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த சட்டதிருத்தத்தில் சொல்லியது. அதனால் 2008-ல் தி.மு.க. அரசின் கீழ் இருந்த கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் வாங்கியிருந்த  அனுமதி தேவை யற்றதாக மாறிவிட்டது. அதனால் டி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப புதிய அனுமதியைகேட்டு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் விண்ணப்பித்தது. தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை போலவே சுமங்கலி உட்பட 9 தனியார் நிறு வனங்கள் டி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப மத்தியஅரசிடம் விண்ணப்பித்திருந்தது. சுமங்கலி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப அனுமதி அளித்த மத்திய அரசு தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு அனுமதி அளிக்க காலம் தாழ்த்துகிறது. இதுதான் பிரச்சினை.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டி.வி. ஒளிபரப்ப அனுமதி அளித்த மத்திய அரசு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் டி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் கேபிள் டி.வி. ஒளிபரப்ப அனுமதி அளிக்காதது ஏன்?

மைத்ரேயன்: கேபிள் டி.வி.யை அரசு நிறுவனங்கள் நடத்த ட்ராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதனால்தான் நாங்கள் அனுமதி தர தயங்குகிறோம் என மத்திய தகவல் ஒளிபரப்பு துணை அமைச்சகம் சொல்கிறது. தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் இதே ட்ராய் இதே காரணத்துக்காக எதிர்ப்பு தெரிவித்தது. ட்ராயின் எதிர்ப்பை மீறி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப அனுமதி வழங்கிய மத்திய அரசு, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் டி.ஏ.எஸ். செட் டாப் பாக்ஸ் மூலம் ஒளிபரப்ப அனுமதி வழங்க தயங்குகிறது. தயாநிதி மாறனுக்காக மத்திய அரசு தமிழக அரசு கேபிள் நிறுவனத்தை இயங்க விடாமல் தடை போடுகிறது.

தற்பொழுது சுமங்கலி நிறுவனம் டி.ஏ.எஸ். செட்டாப் பாக்சுகளை விநியோகித்து வருகிறதே?

மைத்ரேயன்: சுமங்கலி நிறுவனத்துக்கு நெருக்கமான கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் டி.வி. கனெக்ஷன் வைத்திருப்பவர்களை மிரட்டி செட் டாப் பாக்ஸ்களை விநியோகிக்கிறார்கள். அதைத்தான் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான விவேகானந்தன் மூலம் தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

இந்த போரின் அடுத்த கட்டம் என்ன?

மைத்ரேயன்: முதலில் விண்ணப்பம் கொடுத்தோம். பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம்.  முதல்வர் பிரதமருக்கு கடி தம் எழுதினார். இப்பொழுது நாடாளுமன் றத்தில் பிரச்சினையை எழுப்பியுள்ளோம். அடுத்தது லாஜிக்காக பார்த்தால் போக வேண்டிய இடம் சுப்ரீம் கோர்ட்தான். ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் நாங்கள் மத்திய அரசுக்கெதிராக செட் டாப் பாக்ஸ் விஷயத்தில் ஒரு தீர்ப்பை பெற்றுள்ளோம். அதை வைத்து சட்ட ரீதியான போராட் டம் எதுவோ அதை கையிலெடுப்போம்.

சந்திப்பு: தாமோதரன் பிரகாஷ்

ad

ad