புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2012



இலங்கை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழ் பெண்கள் சுற்றுலாவுக்காக திருகோணமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 11ம் திகதி நள்ளிரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி முகாமில் 16 தமிழ் பெண்கள் திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனியான அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் பின்னர் குறித்த யுவதிகள் அனைவரும் மீண்டும் படைமுகாமிற்கே கொண்டு செல்லப்பட்டனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட யுவதிகள் படைமுகாமில் தொடர்ந்தும் தங்க வைக்காமல், அவர்கள் நல்ல மனநிலைக்கு திரும்புவதற்காக கடந்த 13,14ம் திகதிகளில் திருகோணமலைக்கு படையினரால் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் பிரெட்றிக் கோட்டை, திருக்கோணேஸ்வரம் கோவில், கிண்ணியா, நிலாவெளி கடற்கரை மற்றும் கன்னியா வெந்நீரூற்று போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ்ப் பெண்களில் 96 பேர் மட்டுமே இந்தச் சுற்றுலாவுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 3 பேர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதுவதால் சுற்றுலாவில் பங்கேற்கவில்லை. மேலும் 4 பேர் இச்சுற்றுலாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad