புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012


ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
 
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
 
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
 
 டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள். இவர்களில் சிலர் நேற்று ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
 
குற்றம்சாட்டப்பட்டவர்களின் சிலர் வீடுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும், அவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
ரவிதாஸ் கேம்ப் குடியிருப்போர் சங்க பிரதிநிதி பிகாரி லால் என்பவர் இதுபற்றி கூறுகையில், இந்த பகுதியை விட்டு வெளியேறும்படி அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. அவர்களாகவே வீடுகளை காலி செய்து சென்றுவிட்டனர். மீதமிருப்பவர்களும் வேறு இடங்களுக்கு செல்வதாக கூறி வருகின்றனர்.
 
ரவிதாஸ் கேம்ப் பகுதிக்கு இப்போதுதான் முதன் முதலாக கெட்ட பெயர் எற்பட்டுள்ளது என்றார்.

ad

ad