புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2012


ராமதாசை கைது செய்யவேண்டும்': உண்ணாவிரத்தில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து சேலத்தில் போராட்டம் 






 


 
 

 
 
 

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியில் உள்ள குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 'காதலை காரணம் காட்டி தலித் மக்கள் கிராமங்களை வன்னியர்களை சேர்ந்த பலர் எரித்துவிட்டனர்' என விடுதலை சிறுத்தைகள் உட்பட பல ஜனநாயக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து குரல் கொடுத்தனர்.
இதையொட்டி நாயக்கன்கொட்டாய் கிராமத்து  பொதுமக்கள் அப்பகுதியில் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  "இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த அன்பு - ருக்கு தம்பதியினரின் மகள் மங்கம்மாள் (20), உண்ணாவிரதப் போராட்டத்தின் 2-வது நாளான கடந்த வியாழக்கிழமை பகலில் மயங்கி விழுந்தார்.
  இதையடுத்து, தருமபுரி உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்த மங்கம்மாள் 03.12.2012 மாலை உயிர் பிரிந்தார். அங்கு திரண்ட பல்வேறு அமைப்பினரும், உறவினர்களும் உண்ணாவிரதம் இருந்ததால் தான் மங்கம்மாள் உயிர் பிரிந்தது என கூற மருத்துவர்களோ 'வைரஸ் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் ரத்த உறையும் தன்மை குறைந்துள்ளதால் தொடர் ரத்தப் போக்கு ஏற்பட்டு வந்தது பின் மூளை முதலில் செயலிழந்து மற்ற பாகங்களும் செயல் இழந்துவிட்டதால் காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார்' என்கின்றனர்.
ஆனால் அவர் உடலை பிரேத பரிசோதனை செய்துதான் தரவேண்டும் என உடலை வாங்க மறுத்துள்ளனர் பெற்றோர்களும், உறவினர்களும். மருத்துவர்களும், காவல்துறையும் ஒப்புகொண்டன.
இந்நிலையில் இரண்டாம் நாளான 4.12.2012 அன்று விடுதலை சிறுத்தைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி, விடியல் பெண்கள் மையம், அம்பேத்கர் மக்கள் இயக்கம் உட்பட 36 அமைப்புகள் ஒரு கூட்டமைப்பாக இனைந்து சில கோரிக்கைகள் வைத்து மங்கம்மாள் உடலை வாங்க மறுத்தனர்.
பா.ம.க ராமதாஸ்,காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தர்மபுரி தாக்குதல் கொடூரத்தை  சி.பி.ஐ  விசாரிக்க வேண்டும். உயிரிழந்த மங்கம்மாள், மற்றும் வன்னியர் தரப்பில் நாகராஜ் குடும்பத்திற்கு 10 லட்சம் அரசு நிதியுதவி செய்ய வேண்டும். இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என இவைகளை நிறைவேற்றினால் தான் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்து, பின் உடலை பெற்றுகொள்வோம் என்றனர். ஆர்.டி.ஒ பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு அடையவில்லை.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் எதிரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ad

ad