புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012


மு.க. ஸ்டாலின் பின்னால் சென்ற கார் மோதி டிரைவர் பலி

 தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நெல்லையில் நேற்று முன்தினம், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில், காரில் குற்றாலம் சென்றார். அவரது காரை பின் தொடர்ந்து, கட்சியினர் கார்களில் சென்றனர். 


நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது, தி.மு.க., கொடியுடன் சென்ற சபாரி கார் மோதியது. இதில், ஆட்டோ சேதமுற்றது; டிரைவர் சுடலைமுத்து, 40, பலியானார். விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த தி.மு.க.,வினர் சிலரும் காயமுற்றனர். ஆனால், காரை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

ad

ad