புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தை பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர்.

தமிழீழ மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக அன்று மாலை பல்கலைக் கழக வளாகத்தில் தீபம் ஏற்றியதன் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அடக்கு முறையினை சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்டிருந்தனர். இலங்கை அரசின் ஆக்கிரமிப்புப் படைகளின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து அமைதியான வழியில் வாய்களை துணியால் கட்டியவாறு நீதிகோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது இலங்கை அரச படைகள் கண்மூடித் தனமான முறையில் வன்முறைத் தாக்குதல் நடத்தியதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் அடி காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து நான்கு மாணவர்கள் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு இன்றைவரை இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், இலங்கை இனவாத அரசின் இத்தகைய மனித உரிமை மீறல்களைக் கண்டுகொள்ளாமல் சர்வதேச சமுகம் கண்மூடி அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கும் நிலையில், சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பிரித்தானியா அரசிடம் மாணவர்களுக்கான நீதி கோரியும், கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையினை முன்வைத்து இன்று மாலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் பிரித்தானிய தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பல நுற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர் அவர்களுடன் பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழ் இளையோர் நடுவம், நாடு கடந்த தமிழீழ அரசு, பிரித்தானியத் தமிழர் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உள்ளிட்ட பல அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் வாரங்களில் பிரித்தானியாவில் இருந்து செயற்படும் அனைத்து தமிழ் இளையோர் அமைப்புக்களும் இணைந்து பிரித்தானியப் பிரதமருக்கு மனு ஒன்றையும் கையளிக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad