புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012




          ""ஹலோ தலைவரே...…அது நடந்து ஒரு வருசம் ஓடிப்போச்சி. அதுக்கப்புறம் என்னென்னவோ நடந்து போயிடிச்சி.''

""நீ எதைச் சொல்றே... எடுத்த எடுப்பிலேயே இப்படி புதிர் போட்டு என்னை டெஸ்ட் பண்றியே... ம்ம்ம்... ஓ... போயஸ் கார்டனிலிருந்து சசிகலாவையும் அவரோட சொந்தக்காரங்களையும் வெளியேற்றி, கட்சியிலிருந்து கட்டம் கட்டியதை சொல்றியா? போன வருசம் டிசம்பர் 19-ந் தேதிதான் அது நடந்தது. இந்த டிசம்பர் 19-ம் கடந்திடிச்சே...''

""போன மச்சான் திரும்பி வந்தான்ங்கிற கதையா, மன்னிப்பு லெட்டருக்குப் பிறகு சசிகலாவுக்கு கார்டனுக்குள் ரீ-என்ட்ரி கிடைச்சிடிச்சி. ஆனா, முன்னாடி மாதிரி செல்வாக்கு இல்லையாம். எத்தனையோ மா.செ.க்களை பந்தாடிய சசிகலாவால் இப்ப ஒரு கிளைச் செயலாள ரைக்கூட மாற்ற முடியாத நிலைமைதான். அவரோட  சொந்தக்காரங்களுக்கும் பெரிய செல்வாக்கு இல்லை. அவங்கவங்க செட்டில் ஆனதை வச்சி, பிஸினஸை கவனிச்சிக்கிட்டிருக்காங்க. ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் நெருக்கமா இருக்கிறது பெங்களூரில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்குதான்.''

""விசாரணை வேகமா போய்க்கிட்டிருக்கே,… முதல் நாள் 113 கேள்விகளுக்கும் பதில், அடுத்த நாள் 200 கேள்விகளுக்கும் சசிகலா பதில் கொடுத்திருக்காரே...''

""தலைவரே... பேங்க் ட்ரான்சாக்ஷன் சம்பந்தமான எல்லாக் கேள்விகளுக்கும் ஆமான்னுதான் சசிகலா பதில் சொல்லியிருக்காராம். இந்த வழக்கில் இதுவரை 885 கேள்விகளுக்கு சசிகலா பதில் சொல்லியிருக்காரு. அவருக்கு மொத்தம் 1132 கேள்விகள். மீதமுள்ள 247 கேள்விகளும் திங்கட்கிழமைக்குள் முடிஞ்சிடும். ஜெ.கிட்டே 313 ஸ்டேட்மெண்ட்படி 1330 கேள்விகளுக்குப் பதில் வாங்கியிருக்காங்க. இன்னும் சுதாகரன்கிட்டேயும் இளவரசிகிட்டேயும் தலா 700 கேள்விகள் கேட்கணும். அநேகமா பிப்ரவரி கடைசியில் வாதங்கள் தொடங்கி, மார்ச் கடைசியில் தீர்ப்பு வந்திடும்னு கோர்ட் வட்டாரம் சொல்லுது.''

""பொதுவா, இந்த மாதிரி விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக மேல் கோர்ட்டுகளில் ஏதாவது பெட்டிஷனைப் போடுவதுதானே கார்டன் தரப்பின் வழக்கம்?''

""இந்த முறை அதில் ஒரு மாற்றம் தெரியுதுங்க தலைவரே...  வழக்கில் சேர்க்காத ஆவணங்கள் தொடர்பான ஒரு பெட்டிஷனை ஸ்பெஷல் கோர்ட் டிஸ்மிஸ் பண்ணியும் மேல்கோர்ட்டுக்குப் போகலை. என்ன காரணம்னு வக்கீல்கள் வட்டாரத்தில் விசாரித்தேன். 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பில் 46 கோடிக்கு கணக்கு இருக்குன்னும் மீதி உள்ள 20 கோடிக்கான சொத்துகளை, சசிகலாதான் வாங்கியதாகவும், ஜெ.வுக்கு சம்பந்தமில்லைன்னும் கோர்ட்டில் சொன்னால், இந்த கேஸிலிருந்து ஜெ. தப்பித்து விடுவார்.''

""சசிகலா?''

""அரசு ஊழியராக இல்லாத அவர் மீது வருமானத் துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு பெருசா பாதிப்பு ஏற்படுத்தாது. குற் றத்தை ஒப்புக்கொண்டபின், தண்டனை அளிக்கப்பட்டா லும், சுப்ரீம்கோர்ட்டில் ஸ்டே வாங்கிடலாம்ங்கிறதுதான் இப்போதைய ப்ளானாம். அரசு வக்கீலான சந்தேஷ் சவுடா வட்டாரத்தில் கேட்டால், இறுதி விவாதத்தில் ஜெ.வின் ஊழல் களை நிரூபித்து, சசிகலா பலி கடாதான் என்பதையும் நிரூபிப்போம் னும் சொல்றாங்க.''

""குஜராத்தில் நரேந் திரமோடி மூன்றாவது முறையா தன்னோட திறமையை நிரூபிச்சிட்டாரே?''

""அவர் ஹாட்ரிக் அடிப்பாருங்கிறதையும், அங்கே எதிர்க்கட்சிகள் எந்த நிலைமையில் இருக் குங்கிறதையும் போன முறையே நாம பேசியிருந் தோம். ரிசல்ட்டும் அப் படித்தான் வந்திருக்கு. மொத்தமுள்ள 182 தொகுதி களில் 115-ஐ பா.ஜ.க ஜெயிச் சிருக்கு. போன முறையை விட 2 சீட் குறைவு.     இந்திய சுதந்திரப் போராட் டத்தில்கூட இல்லாத அளவுக்கு குஜராத்தில் 2002-ல் ரத்த ஆறு ஓடிச்சி. அந்த அளவுக்கு மதவெறி. ஆனா அதன்பிறகும் மோடி தொடர்ந்து ஜெயிப்பதற்கு இரண்டு காரணத்தைத்தான் சொல்றாங்க. கட்சிக்குள் கோஷ்டிகளை அனுமதிக்காத வலிமையான தலைவராக மோடி இருப்பதும், கட்சி நிதியைத் தவிர வேறெந்த தனிப்பட்ட சொத்துக் குவிப்பு சம்பந்தமான ஊழல் புகார்களில் அவரோட அரசு சிக்காமல் நிர்வாகம் நடத்துவதும்தான் அந்த இரண்டு காரணமாம். ஹாட்ரிக் அடித்த மோடியை பிரதமர் வேட்பாளரா அறிவிப்பது பற்றி பா.ஜ.க.வில் ஆலோசனை நடந்துக்கிட்டிருக்குது. அடுத்த பிரதமர்னு தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வினரால் பிரச்சாரம் செய்யப்படும் ஜெ., முதல்வராக மோடி மீண்டும் பதவியேற்கும் விழாவில் நேரில் கலந்துக்கப் போகிறார்.''

""குஜராத் ஊழல் குறைவான மாநிலம்னு சொல்றே... நம்ம தமிழ் நாடு அமைதி குலையாத, சட்டம்-ஒழுங்கு பூத்துக் குலுங்குற மாநிலம்னு காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஜெ. பேசியிருக்காரே!''

""சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கு ஒரு உதாரணம் சொல்றேன். மாஜி மந்திரி பரஞ்ஜோதி மீது புகார் கொடுத்தாரே அவரோட இரண்டாவது  மனைவி டாக்டர் ராணி ஞாபகமிருக்கா? அந்த கேஸ், கோர்ட்டில் இருக்கிற நேரத்தில் தனக்கு மிரட்டல் வருவதா ராணியே சொல்றார். போன 17-ந் தேதியன்னைக்கு நைட் 8 மணிக்கு, வி.ஐ.பி.ன்னு சொல்லிட்டு ஒருவர் வந்து, தன்னை திருச்சி அ.தி.மு.க. எம்.பி.யின் மச்சான்னு ராணிக்கிட்டே அறிமுகப்படுத்திக்கிட்டாராம். "நான் பரஞ்ஜோதி சொல்லி வந்திருக்கேன். நீ கொடுத்த புகாரால் பரஞ்ஜோதியின் மந்திரி பதவியே காலியாயிடிச்சி. பேசாம, அவர் கொடுக்குற பணத்தை வாங்கிக்கிட்டு கேஸை வாபஸ் வாங்கிடு'ன்னு சொல்லியிருக்காரு.''

""ராணி என்ன சொன்னாராம்?''

""இந்த கேஸ், கோர்ட்டில் இருக்கிற நேரத்தில் நீங்க ஏன் இதையெல்லாம் பேசுறீங்கன்னு கேட்ட தோடு, பரஞ்ஜோதி தன்னை ஏமாற்றியதையும் சொல்லியிருக்காரு ராணி. அப்பதான் அந்த வி.ஐ.பி., "என்னை யாருன்னு நினைச்சுக்கிட்டுப் பேசுறே... நான்தான் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜன். எம்.பி.யோட மச்சான். கேஸை வாபஸ் வாங்கலைன்னா நடக்கிறதே வேற'ன்னு சொல்லி, செல்போனிலும் ஃபோட்டோ எடுத்துட்டுப் போயிருக்காராம். இந்த விவகாரத்தை ஸ்ரீரங்கம் ஏ.சி. ஜெயச்சந்திரன்கிட்டேயும் ராணி சொல்லிட்டார். பரஞ்ஜோதி  தரப்பு டெரரா நடந்துக்கிற விவகாரம், ராணி மூலமா வெளியே வந்ததில், அமைச்சர் சிவபதியும் அவரோட ஆட்களும் உற்சாகமா இருக்காங்களாம்.''

""நல்லாத்தாம்ப்பா இருக்கு சட்டமும் ஒயுங்கும்! இருக்கிற டென்ஷன் போதாதுன்னு மதுரையில் சாதி அமைப்புகளோட கூட்டத்தை ராமதாஸ் கூட்டி புது டென்ஷனை உண்டாக்கியிருக்காரே!''


""கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அங்கே டென்ஷன் ஆரம்பமாயிடிச்சி. "மீடியாக்களை உள்ளே விடாதீங்க. நாம் தலித்துகளைத் திட்டுவதைத்தான் பெருசுபடுத்துவாங்க'ன்னு ராமதாஸ் சொல்ல, எல்லாக் கதவுகளையும் மூடிட்டாங்களாம். கூட்டத்தில் கலந்துக்கிட்ட நாயுடு  பேரவையினர் ரொம்ப கோபமா ராம தாஸைப் பார்த்து, "எங்களை வந்தேறிங்கன்னு உங்க மகன் அன்புமணி சொல்லுறாரு. இதுக்கு மன்னிப்புக் கேட்கணும்'னு எடுத்த எடுப்பிலேயே பிரச்சினையைக் கிளப்பியிருக்காங்க. ராமதாஸ் உடனே, "நான் எம்.ஜி.ஆரையே வந்தேறின்னும் அப்படிப்பட்டவர் ஆட்சியைப் பிடிச்சிட்டாருன் னும்தான் சொல்லுவேன். அ.தி.மு.க.காரங்க யாரும் கோபப்படலை'ன்னு சொல்லியிருக்காரு. ஆனாலும் நாயுடு பேரவையினர் சமாதான மடையலை. கடைசியா, ராமதாஸ் மன்னிப்புக் கேட்டுக்கிட்டாராம். அதுபோலவே, தேவர் பேரவையினரும், டாக்டர் எங்களை அவமானப் படுத்திட்டாருன்னு கோபப்பட, அவங்களையும் ராமதாஸ் சமாதானப்படுத்தியிருக்காரு.''

""இந்தக் கூட்டத்தில் என்ன பேசுனாங் களாம்?''

""அமைப்புக்கு என்ன பெயர் வைப்பதுன்னு முதலில் யோசிச்சாங்க. "வன்கொடுமைக்கு எதிரான இயக்கம் மற்றும் கலப்புத் திருமணத்திற்கு எதிரான கூட்டமைப்பு'ன்னு ராமதாஸ் சொல்ல, "அய்யா... சினிமா டைட்டில் மாதிரி நாலு எழுத்தில் நச்னு பேர் வையுங்க'ன்னு  சொல்லியிருக்காங்க. அப்புறம் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கு. எல்லாமே ராமதாஸ் சமீபத்தில் பேசுற விஷயங்கள்தான். எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தணும்ங்கிறதுதான் மதுரையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிற புது முடிவு.''

""அரசியல் பண்றதுக்கு ஏதாவது பரபரப்பு தேவைப்படுது. ஆனா, 91 வயதில் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட பேராசிரியர் அன்பழகன் எந்த பரபரப்புக்கும் ஆட்படாத அரசியல்வாதியா இருக்காரே... ஆச்சரியம்தான்.''

""தலைவரே... டிசம்பர் 19-ந் தேதியன்னைக்குப் பேராசிரியரோட 91-வது பிறந்தநாள் அன்னைக்கு காலையிலேயே தொண்டர்கள் கூட்டம் அவரோட வீட்டில் குவிஞ்சிடிச்சி. மனைவிக்கு உடல்நலம் சரியில்லாததால் பிறந்தநாள் வேண்டாம்னுதான் பேராசிரியர் இருந்தாரு. கலைஞர்தான் வற்புறுத்தி பிறந்தநாள் விழா, பொதுக்கூட்டம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிட்டாரு. கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் சாதாரண தொண்டர்களும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தாங்க. கலைஞரும் வழக்கம்போல் பேராசிரியர் வீட்டுக்குப் போய் வாழ்த்து சொன்னாரு.''

""அரசியல் லாபத்தைக் கணக்குப் பண்ணி தன்கிட்டே வர்றவங்களை பேராசிரியர் ஊக்கப் படுத்தமாட்டாரு. அப்படியிருந்தும் அவர் பிறந்த நாளுக்கு நிறைய தொண்டர்கள் வந்திருக்காங்களே...''

""சாயங்காலம் வடசென்னையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் நல்ல  கூட்டம். அதைப் பற்றி நான் சொல்றேன். கட்சிக்காரர்கள் பலரும் கலைஞரும் பேராசிரியரும் போல் இணைந்து வாழணும்னு சொல்லுவாங்க. அதுபற்றி மேடையில் சொன்ன பேராசிரியர், நான் வயதில் மூத்தவன் அதனால நான் மாப்பிள்ளை. கலைஞர் இளையவர். அவர் மணப்பெண் என்று சொல்ல, ஒரே சிரிப்பலை. வாழ்க்கையிலும் இயக்கத்தின் மீதும் உள்ள ரசனையான இந்தப் பற்றுதான், இத்தனை வயதிலும் கலைஞரையும் பேராசிரியரையும் இளை ஞர்கள் போல பொதுவாழ்வில் நிலை நிறுத்தியிருக்கு.''

படங்கள் : ஸ்டாலின், அண்ணல், அசோக்

ad

ad