புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012


யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மூவரை புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகளை நாளை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளரும் பேராசிரியருமான புஷ்பரெட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அலுவலகத்திற்கே இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புலனாய்வு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட மாணவிகளில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகிறது.
மற்றையவர் யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியின் தலைவியும் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.
இதேவேளை, அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad