புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


பிரதம நீதியரசருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

* ஆட்டோ சாரதிகள் பேரணி
* நாட்டை துண்டாடும் சதியை முறியடிக்குமாறு பலத்த கோ'ம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆட்டோ சாரதிகள் நேற்று கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை
நடத்தினர். மக்கள் இறைமையை பாதுகாக்குமாறும், நீதிமன்ற சுதந்திரத்தை காக்குமாறும் அரசியலமைப்பினூடாக நாட்டை துண்டாடும் சதியை தோற்கடிக்குமாறும் கோரி ஐந்நூறுக்கும் அதிகமான ஆட்டோக்கள் இந்தப் பேரணியில் ஈடுபட்டதாக ஆட்டோ சாரதிகளின் தேசிய அமைப்பு தெரிவித்தது.
கொழும்பு விகார மகாதேவி பூங்காவிற்கருகில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி மருதானையூடாக அளுத்கடை நீதிமன்றம், புறக்கோட்டை ரயில் நிலையம், லேக்ஹவுஸ் நிறுவனம், கங்காராமை விஹாரை ஊடாக மீண்டும் விகார மகாதேவி பூங்காவை அடைந் தது. அளுத்கடை நீதிமன்ற வளாகத் திற்கு அருகில் வைத்து தேசிய கூட்டு ஆட்டோ சாரதிகள் சங்க செயலாளர் ரோஹன பெரேரா சில சட்டத்தரணிகளி னால் தாக்கப்பட்டதாக ஆட்டோ சாரதிகளின் தேசிய அமைப்பின் இணை ப்பாளர் லலித் தர்மசேகர தெரிவித்தார்.
இது குறித்து வாழைத்தோட்ட பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் தாக்கப்பட்டவர் கொழும்பு பெரிய ¡ஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான சுலோ கங்களை தாங்கியவாறு ஆட்டோக்கள் எதிர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டன. மக் களின் இறைமையில் கைவைக்காதே, நாட்டை துண்டாடும் சதியை தோற்கடிப்போம்! நீதிமன்ற சுதந்திரத்தை பாதுகாப்போம்; மோசடிக் கும்பலிடமிருந்து நீதிமன்றத்தை மீட்போம்; வென்ற சுதந்திரத்தை பாதுகாப்போம்; அரசியலமைப்பினூடாக நாட்டைத் துண்டாடும் சதியை தோற்கடிப்போம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் கோசமெழுப்பியவாறும் ஆட்டோ சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாண்புமிகு மெடம் வெட்கம்! என சில ஆட்டோக்களில் பதாதைகள் தொங்க விடப்பட்டிருந்தன. துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப் பட்டன. எதிர்ப்புப் பேரணி முடிவில் விகார மகாதேவி பூங்காவுக்கு முன்பாக கூட்டமொன்று இடம் பெற்றது.
இந்த எதிர்ப்பு பேரணி குறித்து கருத்துத் தெரிவித்த ஆட்டோ சாரதிகளின் தேசிய கூட்டமைப்பின் இணைப்பாளர் லலித் தர்மசேன கூறியதாவது:-
நாட்டில் யுத்தம் முடிவடைந்து அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்குமிடையில் மோதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக நாட்டைத் துண்டாட சதிமேற்கொள்ளப் படுகிறது. தெரிவுக்குழு முன் பிரதம நீதியரசர் ஆஜராக சென்ற தினத்தில் அவருக்கு நீதிமன்றத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது. அவர் அரசியல்வாதி போன்றே நடந்து கொண்டார். அவரைச் சுற்றி மோசடியாக நாட்டைத் துண்டாடும் சட்டத்தரணிகளே இருந்தனர்.
நாட்டைத்துண்டாடும் இந்தக் கும்பலுக்கு எதிராகவே ஆட்டோ சாரதிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். தனக்கெதிராக குற்றச் சாட்டு எழுந்தவுடன் பிரதம நீதியரசர் கெளரவமாக வழக்கு விசாரணைகளில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். இவை குறித்து மக்களை அறிவூட்டுவதே எமது நோக்கமாகும் என்றார்.

ad

ad