புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2012


யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய வீட்டுத்திட்டத்திலும் ஈ.பி.டிபியினர் கைவரிசை
யாழ். நெடுந்தீவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் ஈ.பி. டி.பி யினரால் தமக்குள் பகிரப்பட்டுள்ள நிலையில் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நெடுந்தீவுக்கு ஜ.சி.ஆர்.சி யினால் சுமார் 140 வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வீடுகள் எவையும் உண்மையாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த, சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை.
அவை அனைத்தும் ஈ.பி.டி.பி யினரால் முழுமையாக தமக்குள்ளேயே பகிரப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஈ.பி.டி.பி யினரின் ஆட்சியிலிருக்கும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் கூட வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அவர்களுக்கு ஏற்கனவே வீடுகள் உள்ளதோடு, முதற்கட்டமாக வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அனைவரும் ஈ.பி.டி.பி யினரின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் விடயம் குறித்து மக்கள் ஜ.சி.ஆர்.சி யிடம் கேட்டபோது, பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக கூறியிருக்கின்றனர். இதன் மூலம் ஈ.பி.டி.பி யினர் தமது ஆட்சியிலுள்ள பகுதிகளில் செய்யும், அடாவடிகள், ஊழல்கள் அம்பலப்பட்டுள்ளது.

ad

ad