புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது:
தமிழகம், மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையை சேர்ந்தவர் நரேந்திரகுமார் (41). மேல் தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். கீழ்தளத்தில் காஸ் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.
இங்கு தங்கியிருந்து, இலங்கைத் தமிழரான யோகலிங்கம் (35) என்பவர், 5 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். மேலும் சிலரும் வேலை பார்க்கின்றனர். அனைவரும் சபரி மலைக்கு மாலை போட்டுள்ளனர்.
இதையொட்டி நேற்றிரவு ஐயப்பன் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். இன்று காலையில் எழுந்து வேலைகளை கவனிப்பதற்காக அவசர அவசரமாக குளித்தார் யோகலிங்கம்.
அப்போது, பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்கு அணைக்கப்படாமல் அப்படியே இருந்தது தெரிந்தது.
உடனே ஈரக்கையுடன் மின்விளக்கை அணைக்க முயற்சித்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே யோகலிங்கம் பரிதாபமாக இறந்தார்.
அந்த நேரத்தில் குளிப்பதற்காக நரேந்திரகுமார் வந்தார். யோகலிங்கம் இறந்திருப்பது தெரியாமல் அவரை எழுப்பியுள்ளார். யோகலிங்கம் எழவில்லை. அதன்பிறகே அவர் இறந்து கிடப்பது தெரிந்தது.
தாம்பரம் பொலிஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்

ad

ad