புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


இந்திய ஜெனரல் யாழ் விஜயம்: பாக் உளவுத்துறை இயங்குவது தொடர்பாக ஆராய்வாரா இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் பகரம் சிங் இன்று கொழும்பு செல்லவிருக்கிறார். இன்று முதல் 22ம் திகதிவரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என்று அறியப்படுகிறது. இந் நிலையில் இவர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என்ற தகவல்களும் கசிந்துள்ளது. 3 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி, திருகோணமலை மற்றும் தென்னிலங்கையில் உள்ள சில இராணுவத் தளங்களுக்குச் செல்ல ஏற்பாடாகியிருந்தது. இருப்பினும் இவர் தனது சுற்றுப்பயணத்தில் யாழ் செல்ல விரும்புவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சைக் கோரியுள்ளார். இதற்கு அமைவாகவே அவர் சிலவேளைகளில் யாழ் செல்லலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பாக்கிஸ்தான் உளவுப் பிரிவின் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது என்ற விடையம் நீண்ட நாட்களாக ஊடகங்களில் வெளியாகிவருகிறது. இந் நிலையில், இவரது யாழ் விஜயத்தில் இது குறித்து ஆரயப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. யாழில் இருந்தபடி இந்தியாவை பாக்கிஸ்தான் உளவு பார்ப்பதாகவும். இந்திய இராணுவத் தளங்களை அது உண்ணிப்பாகக் கவனித்து வருவதாகவும் பல ஊடகங்கள் முன்னர் செய்திகளை வெளியிட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ad

ad