புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012

 குப்தில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதிய 2-வது போட்டி நேற்று நடந்தது. 


தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விளையாடிய போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. 

டுபெலிசிஸ் 43 பந்தில் 68 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), தொடக்க வீரர் டேவிட்ஸ் 38 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிரேஸ் வெல் 3 விக்கெட் கைப்பற்றினார். 

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூசிலாந்துக்கு 19 ஓவரில் 169 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் குப்தில் அதிரடியான சதத்தால் அந்த அணிக்கு வெற்றி கிடைத்தது. கிளைன்வெல்ட் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 11 ரன் தேவைப்பட்டது. முதல் 5 பந்தில் 7 ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்டது.
நியூசிலாந்து 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குப்தில் 69 பந்தில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி போர்ட் எலிசபெத்தில் வருகிற 26-ந்தேதி நடக்கிறது.        

ad

ad