புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012


என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாரதி,பிரபு உடல்கள்
மதுரை மருத்துவமனையில்!
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். இவர் கடந்த மாதம் 27-ந்தேதி வேம்பத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது படுகொலை செய்யப்பட்டார்.


இதுதொடர்பாக ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் புதுக்குளத்தை சேர்ந்த பிரபு (27), முத்துகுமார் (25), மகேஸ்வரன் (23) ஆகிய 3 பேரும் திருப்பூர் நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் சரணடைந்தனர்.

அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி மலர் மன்னன் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பாரதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபு மற்றும் பாரதியின் காவலை நீட்டிப்பதற்காக இன்று மாலை சிவகங்கை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் கருப்பாயூரணி என்ற இடத்தில் வந்தபோது போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

ad

ad