புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாகிறார். அகமதாபாத்தின் புறநகர் பகுதியான மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட குஜராத் முதல்- மந்திரி மோடி 70 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
 
அவர் காங்கிரஸ் வேட்பாளரும், சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சஞ்சய்பட்டின் மனைவியுமான சுவேதாபட்டை தோற்கடித்தார். குஜராத் முன்னாள் உள்துறை மந்திரியும், மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான அமித்ஷா தரன்புரா தொகுதியில் வெற்றி பெற்றார். சித்தாபூர் தொகுதியில் போட்டியிட்ட மந்திரி ஜெய்நாராயணன் வியாஸ் பின்தங்கியுள்ளார்.
 
காங்கிரஸ் தலைவர் பின்தங்கியுள்ளார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில் பின்தங்கியுள்ளார். குஜராத் முன்னாள் முதல்- மந்திரியும், குஜராத் பரிவர்த்தன் கட்சி (ஜி.பி.பி.) தலைவருமான கேசுபாய் பட்டேல் விஸ்வதார் தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ad

ad