புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012



நாட்டில் எந்தவொரு காரணத்திலேனும் டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், உத்தேச பேருந்து கட்டண மீளாய்வை பெற்றுக்கொள்ளாது சேவையிலிருந்து விலகப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு
பெற்றோல் 10 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டது. டீசலின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.
அந்த நிலைமைகளுக்கு அமைய விலை அதிகரிக்கப்பட்டால் தொடர்ந்தும் பேருந்து சேவையினை எம்மால் தொடர முடியாதுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் அதிகரிக்க இருக்கும் பேருந்து கட்டணங்களை தற்போது இருக்கும் குறைபாடுகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாது, பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியாது என்றும் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.
அரச வாகனங்களுக்கு அரச முத்திரை ஒட்டப்பட வேண்டும்: அமைச்சர் செனவிரத்ன
இலங்கையில் உள்ள அனைத்து அரச வாகனங்களுக்கும் அரசாங்க முத்திரை கட்டாயம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்த, சுற்றறிக்கை சகல அரசாங்க நிலையங்களுக்கும், மாவட்ட செயலாளர் காரியாலயத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க வாகனங்களை பொறுப்பின்றி பயன்படுத்துதல் மற்றும் சாரதிகள் அசாதாரண முறையில் வாகனங்களை பயன்படுத்துததல் தொடர்பில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அந்தத முறைப்பட்டினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

ad

ad