புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012


நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி! 

        சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது. 

தொடர்ந்து அவர் தன் ரசிகர்கள் நடத்திய பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு, விழா மேடையில் கலைஞர் பற்றியும் ஜெயலலிதா பற்றியும் பேசினார். ’அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. இருந்தாலும் நான் அரசியலுக்கு வருவது என் கையில் இல்லை. அது ஆண்டவன் கையில் இருக்கிறது’ என்றார். சமீபத்தில் கலைஞர் தலைமையில் நடந்த விழாவில் ரஜினி மீண்டும் தான் அரசியலுக்கு வருவது பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 



மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றிய சான்றோர்களின் கருத்துகள் ப.சிதம்பரம் ஒரு பார்வை என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் 29.12.2012 சனிக்கிழமை கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பல ஆண்டுகளுக்கு முன்னர் இதே அரங்கில் நடைபெற்ற ஒரு விழாவில், ப.சிதம்பரம் பற்றி 2 வரிகள் பேச வேண்டும் என்று சொன்னார்கள். அவரைப் பற்றி 2 வரிகளில் பேசிவிட முடியாது. 10 வரிகள் பேச வேண்டும் என்று நான் சொன்னேன். 10 வரிகள் பேச வேண்டிய நேரம் இப்போதும் வந்துள்ளது.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழில் பேசினால், அதில் ஒரு ஆங்கில வார்த்தைகூட வராது. ஆங்கிலத்தில் பேசினால் தமிழ் வார்த்தை வராது. ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசக்கூடியவர். ஆனால் இங்கே (எனக்கு) பேசும்போது தமிழும், ஆங்கிலமும் கலந்துதான் வரும்.'

டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் எனக்கு பொழுதுபோக்கு விருது வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது ப.சிதம்பரம் அந்த விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது.

தற்போது இளைய தலைமுறையினர், இளைஞர்கள் நாட்டில் நிகழும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் ஏற்படும் விளைவுகள் அரசுக்கு நன்கு தெரியும். அந்த பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டுக்கு பெரிய ஆபத்து ஏற்படும். நாட்டில் பெரிய புரட்சி வெடிக்கும் என்பதும் அரசுக்கும் தெரியும்.

நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்று நண்பர்கள் கேட்பதாக ப.சிதம்பரம் ஒரு ரசிகர் போல என்னிடம் கேட்பார். அரசியலுக்கு வந்தால் என்வழி தனி வழியாக இருக்கும் என்றார்.

ad

ad