புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 டிச., 2012


பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர் பாக மேலும் தெரியவரு வதாவது:
நேற்றிரவு பாசையூர் தேவாலயத்தில் ஒளி விழா நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது இளை ஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகி கத்திக் குத்தில் முடிந்தது.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர்  யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் நேற்றிரவு உறுதிப்படுத்தினர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ad

ad