புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012



திமுகவில் கோஷ்டி பூசல் :
ஸ்டாலினுக்கு வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படத் திறப்பு விழாவுக்கு வந்த, ஸ்டாலினை வரவேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கோஷ்டியினர் வைத்த பேனரை, அகற்றுமாறு, வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


 இதனால், சேலம் தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத் தின், உருவப்படம் திறப்பு விழா, சேலம் ஜவகர் மைதானத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்று, அந்த படத்தை திறந்து வைத்து பேசினார்.
 ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாநகரப் பகுதிகளில், வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள், டிஜிட்டல் பேனர் மற்றும் கொடிக் கம்பங்கள் வைத்திருந்தனர். அதேபோன்று, பனமரத்துப்பட்டி முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், மாநில இளைஞரணி துணைச் செயலருமான ராஜேந்திரன் கோஷ்டியினரும், செல்வகணபதி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களும், ஸ்டாலினை வரவேற்று, பிரமாண்ட விளம்பர பேனர்களை அமைக்க முயற்சி எடுத்தனர். இதற்காக, பேனர் அச்சடிக்கும் பணி, இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்தது. 
வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளர்கள், "இது எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி; கட்சி நிகழ்ச்சி ஒன்றுமல்ல; அவரை வரவேற்க நாங்கள் தான் பேனர் வைப்போம். உங்களுடைய பேனர் எல்லாம் இருக்கக்கூடாது' என, காட்டமாகக் கூறியுள்ளனர். ராஜேந்திரன் தரப்பினர், அச்சடிக்க கொடுத்த பேனர்களை வாபஸ் பெற்றனர்.
ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான ராஜேந்திரன், செல்வ கணபதி, வழக்கறிஞர் குணசேகரன், ஆகியோர் பேனர் வைக்க, வீரபாண்டி ராஜா தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால், கடும் அதிருப்தியடைந்தனர். ராஜேந்திரன் ஆதரவாளர்கள் கூறியதாவது: ஸ்டாலின் வருகைக்காக, பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்க ஏற்பாடு செய்தோம். 
இதற்காக, பேனர் அச்சடிக்க ஆர்டர் கொடுத்தோம். ராஜா ஆதரவாளர்கள், தங்களுடைய குடும்ப விழா எனக் கூறி தடுத்தனர்.

நாங்கள் வைத்த சில பேனர்களையும் அவர்களாகவே அகற்றி விட்டனர். அடுத்த மாதம், 20ம் தேதி, சேலத்தில், இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது, எங்களுடைய பலத்தைக் காட்டுவோம்’’என்று கூறின

ad

ad