புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012


கிளிநொச்சியில் சிறிதரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியில் மனித உரிமை ஆர்வலர்கள் கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் அமைதியான முறையில் மனித உரிமை நிகழ்வை அனுட்டித்தனர்.
இதே வேளை கிளிநொச்சி கச்சேரிக்கு முன்பாக அரசின் தமிழின அடக்குமுறையையை கண்டித்து த.தே.மக்கள் முன்னணியால் கண்டன நிகழ்வும் இடம்பெற்றது.
இதே நேரத்தில் கிளிநொச்சி கச்சேரியின் எதிர்ப்புறத்தில் இலங்கை இராணுவ கைக்கூலிகளின் கேலிக்கூத்தொன்று அரங்கேறியது. இதற்கு கிளிநொச்சியின் இலங்கை இராணுவம் மற்றும் அரசின் பிரபல கைக்கூலிகளான பன்னங்கண்டி குட்டிமாமா மற்றும் இரத்தினமணி ஆகியோர் இந்த தமிழர்களுக்கு எதிரான கோசங்களை தாங்கி ஊளையிடும் குழுவிற்கு தலைமை தாங்கினர்.
மனித உரிமைகள் என்றாலே சுத்தசூனியமான இலங்கை அரசாங்கத்தின் கோமாளித்தனத்துக்கு ஒத்துழைக்குமாறு கிளிநொச்சியின் பல அமைப்புகள் ஆட்டோ சங்கம் என்பனவற்றை இலங்கை இராணுவ புலனாய்வுதுறையினர் அச்சுறுத்தியபோதும் அனைவரும் மறுத்தனர்.
இந்நிலையில் குட்டிமாமா என்ற தமிழின துரோகியும் அவரில் தங்கிவாழும் சிலரும் இரத்தினமணி என்ற அடிவருடியால் அனுப்பப்பட்ட முதுகு எலும்பு இல்லாதவர்களும் கலந்துகொண்டு த.தே.கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எதிராகவும் சிங்கள மனிதநேயம் மிக்க மனிதரான விக்கிரமபாகு கருணாரட்ணவிற்கு எதிராகவும் த.தே.மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராகவும் சிறு பிள்ளைத்தனமான கூச்சல்களை இட்டனர். இக்கோமாளிதனத்தை வீதியால் சென்ற மக்கள் அனைவரும் ஏளனத்துடன் பார்த்துச்சென்றனர்.

ad

ad