புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2012


அப்பி மே நோனவ மெத்தன தியாகென மடவனவா (நாங்கள் இந்தப் பெண்ணை இங்கு வைத்து மேய்ப்போம்), பபா  நேஹே பபா உக்குங் (குழந்தை இல்லை பால்குடிக் குழந்தை), 
பைத்தியக்காரப் பெண்மணி, நீதிமன்றில் நாடகமாடுபவள் என்றெல்லாம் தன்னை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் விசாரணையின் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள் என்று பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க சபா நாயகருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். 
 
பிரதம நீதியரசரின் சட்ட விவகாரங்களைக் கையாளும் சட்ட நிறுவனம் மூலமே இந்தக் கடிதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை இந்தக் கடிதத்தை அனுப்பிவைத்துள்ள நீலகண்டன் அன்ட் நீலகண்டன் சட்டநிறுவனம் இது தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் சபாநாயகரைக் கேட்டிருக்கிறது.
 
தெரிவுக்குழு விசாரணையின் போது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவுக்குழுவின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
"பிஸ்ஸு கேஹேனி (பைத்தியக்காரப் பெண்மணி), அப்பி மே நோனவ மெத்தன தியாகென மடவனவா (நாங்கள் இந்தப் பெண்ணை இங்கு வைத்து மேய்ப்போம்), பபா  நேஹே பபா உக்குங் (குழந்தை இல்லை பால்குடிக் குழந்தை), உஸாவியே நாடகங் நட்டனவா (நீதிமன்றில் நாடகமாடுகிறார்), மெயாட்ட ஆதம்லா கொடக் இன்னவா (இவருக்கு நிறைய ஆதாம்கள் உள்ளனர்), பபா வகே இட்டியட்ட பபா வகே வெட நேஹே (குழந்தை போல் இருந்தாலும் வேலைகளோ குழந்தைபோல் இல்லை)'' என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களால் பிரதம நீதியரசர் நிந்திக்கப்பட்டதாகவும் இவற்றை ஏற்றுக்கொள்ளவே முடியாதென்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
நாட்டின் பிரதம நீதியரசர் ஒருவர் மீது அதுவும் பெண்மணி ஒருவர் மீது இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளமுடியாதென்பதால் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

ad

ad