புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2012


பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறி

பிரதம நீதியரசர் ராணி பண்டாரநாயக்க தவறான முன்மாதிரியை காட்டியுள்ளார்

தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு*
* நீதிபதியில் நம்பிக்கை இல்லை என்று சாதாரண நபர் வெளியேற முடியுமா?
* தவறு செய்தவரை ஆர்ப்பாட்டம் நடத்தி பாதுகாக்க முடியாது

* பிரதம நீதியரசரில் மக்கள் நம்பிக்கை இழப்பு
* தவறு செய்தவரை ஆர்ப்பாட்டம் நடத்தி பாதுகாக்க முடியாது
பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை குறித்து நம்பிக்கை இல்லையென பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா பாதியில் எழுந்து சென்றதன் மூலம் தவறான முன்மாதிரியைக் காட்டியுள்ளார் என கூறிய தொழிற்சங்கத் தலைவர்கள், நீதிபதி குறித்து நம்பிக்கை இல்லையென பொதுமகன் ஒருவருக்கு இடைநடுவில் எழுந்து வர முடியுமா என்று கேள்வியெழுப்பியதோடு சாதாரண உத்தியோகத்தர் முதல் பிரதம நீதியரசர் வரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் குறிப்பிட்டனர்.
நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் அரசாங்க ஆயுர்வேத மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் நிமல் கருணாசிறி, சுயதொழில் புரிவோர் சம்மேளனத் தலைவர் மஹிந்த கஹந்த லியனகே, சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத் தலைவர் கித்சிறி கமகே,
அகில இலங்கை ஆட்டோ சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு அரசாங்க ஆயுர்வேத மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் நிமல் கருணாசிறி கருத்துத் தெரிவிக்கையில், கீழ்மட்ட உத்தியோகஸ்தர் முதல் பிரதம நீதியரசர் வரை எவர் தவறுசெய்திருந்தாலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்.
உயர்பதவியில் உள்ளவர்கள் தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படுகிறது. சகல அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அரசியல் யாப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்தே பதவியேற்கின்றனர்.
பிரதம நீதியரசருக்கு எதிராக அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமகன் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகையில் நீதிபதி குறித்து நம்பிக்கை இல்லையெனக் கூறி வெளியேறமுடியாது. தெரிவுக்குழுவின் விசாரணை குறித்து நம்பிக்கை இல்லையென்று கூறி இடைநடுவில் வெளியேறியதன் மூலம் பிரதம நீதியரசர் தவறான முன்மாதிரியைக் காட்டியுள்ளார்.
நீதிபதிகளுக்கு சட்டத்தரணிகளுடன் கைகுலுக்கவோ பொது வைபவங்களில் கலந்துகொள்ளவோ முடியாது. அவர்களுக்கென்று ஒழுக்கநெறிகள் உள்ளன. அதன்படியே அவர்கள் செயற்பட வேண்டும். பிரதம நீதியரசருக்கு எதிராக சட்டத்துக்கு உட்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள் செய்து நிறுத்த முடியாது. தனக்குப் பாதிப்பு என்பதற்காக அரசியல்யாப்பு தவறு என்று கூற முடியாது. சிறு தவறு செய்ததற்காக இந்தோனேஷியப் பிரதம நீதியரசர் கூட அண்மையில் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்றார்.
சுயதொழில் புரிவோர் சம்மேளனத் தலைவர் மஹிந்த கஹந்த லியனகே கருத்துத் தெரிவிக்கையில், யாராவது தவறு செய்திருப்பது நிரூபணமனால் அது நீதிமன்றத்தின் தலைவரான பிரதம நீதியரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அன்றி தற்பொழுது உள்ள சட்ட முறைமைக்கு எதிராகவே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தவறுசெய்த ஒருவரை ஆர்ப்பாட்டம் நடத்தி காப்பாற்ற முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் நீதிமன்றங்களுக்குக் கல்லெறிந்தவர்கள் கூட இன்று இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றனர் என்றார்.
சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத் தலைவர் கித்சிறி கமகே கருத்துத் தெரிவிக்கையில், சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் உயர்பதவியில் உள்ளவர் கீழ் மட்டத்தில் உள்ளவர் என பாகுபாடு காட்டமுடியாது. பிரதம நீதியரசர் தவறு செய்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளும் வகையில் சிலர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கத் தயாராக உள்ளனர். பிரதம நீதியரசரும் வேறு நோக்கத்தில் செயற்படுவதாகவே தெரிகிறது. இது தொடர்பிலான உண்மை நிலைகள் குறித்து பொதுமக்கள் நடுநிலையாகச் சிந்திக்க வேண்டும் என்றார்.
அகில இலங்கை ஆட்டோ சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாம் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்கிறோம். ஆனால் பிரதம நீதியரசர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக சட்டத்தரணிகளுடன் கைலாகு கொடுத்ததும், சட்டத்தரணிகள் பிரதம நீதியரசருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளாகும். முன்னாள் பிரதம நீதியரசர்களுக்கு எதிராக கையொப்பம் இட்டவர்கள் தற்போதைய பிரதம நீதியரசரோடு இணைந்திருப்பது கேலிக்கூத்தாகும்.
பிரதம நீதியரசர் குறித்த மக்களின் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அமுலிலுள்ள சட்டத்துக்கு அமைவாகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் தவறு இருந்தால் அதனை பாராளுமன்ற எம்.பிக்களின் பங்களிப்புடன் திருத்த முடியும் என்றார்.அகில இலங்கை ஆட்டோ சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு அரசாங்க ஆயுர்வேத மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் நிமல் கருணாசிறி கருத்துத் தெரிவிக்கையில், கீழ்மட்ட உத்தியோகஸ்தர் முதல் பிரதம நீதியரசர் வரை எவர் தவறுசெய்திருந்தாலும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும். உயர்பதவியில் உள்ளவர்கள் தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படுகிறது. சகல அரசாங்க உத்தியோகஸ்தர்களும் அரசியல் யாப்பை பாதுகாப்பதாக உறுதிமொழி அளித்தே பதவியேற்கின்றனர்.
பிரதம நீதியரசருக்கு எதிராக அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமகன் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகையில் நீதிபதி குறித்து நம்பிக்கை இல்லையெனக் கூறி வெளியேறமுடியாது. தெரிவுக்குழுவின் விசாரணை குறித்து நம்பிக்கை இல்லையென்று கூறி இடைநடுவில் வெளியேறியதன் மூலம் பிரதம நீதியரசர் தவறான முன்மாதிரியைக் காட்டியுள்ளார்.
நீதிபதிகளுக்கு சட்டத்தரணிகளுடன் கைகுலுக்கவோ பொது வைபவங்களில் கலந்துகொள்ளவோ முடியாது. அவர்களுக்கென்று ஒழுக்கநெறிகள் உள்ளன. அதன்படியே அவர்கள் செயற்பட வேண்டும். பிரதம நீதியரசருக்கு எதிராக சட்டத்துக்கு உட்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டங்கள் செய்து நிறுத்த முடியாது. தனக்குப் பாதிப்பு என்பதற்காக அரசியல்யாப்பு தவறு என்று கூற முடியாது. சிறு தவறு செய்ததற்காக இந்தோனேஷியப் பிரதம நீதியரசர் கூட அண்மையில் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்றார்.
சுயதொழில் புரிவோர் சம்மேளனத் தலைவர் மஹிந்த கஹந்த லியனகே கருத்துத் தெரிவிக்கையில், யாராவது தவறு செய்திருப்பது நிரூபணமனால் அது நீதிமன்றத்தின் தலைவரான பிரதம நீதியரசராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அன்றி தற்பொழுது உள்ள சட்ட முறைமைக்கு எதிராகவே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தவறுசெய்த ஒருவரை ஆர்ப்பாட்டம் நடத்தி காப்பாற்ற முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு காலத்தில் நீதிமன்றங்களு க்குக் கல்லெறிந்தவர்கள் கூட இன்று இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கின்றனர் என்றார். சமுர்த்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சங்கத் தலைவர் கித்சிறி கமகே கருத்துத் தெரிவிக்கையில், சட்டத்தை அமுல்படுத்தும் வகையில் உயர்பதவியில் உள்ளவர் கீழ் மட்டத்தில் உள்ளவர் என பாகுபாடு காட்டமுடியாது.
பிரதம நீதியரசர் தவறு செய்தாலும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளும் வகையில் சிலர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கத் தயாராக உள்ளனர். பிரதம நீதியரசரும் வேறு நோக்கத்தில் செயற்படுவதாகவே தெரிகிறது. இது தொடர்பிலான உண்மை நிலைகள் குறித்து பொதுமக்கள் நடுநிலையாகச் சிந்திக்க வேண்டும் என்றார்.
அகில இலங்கை ஆட்டோ சாரதிகள் சங்கத் தலைவர் லலித் தர்மசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நாம் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்கிறோம். ஆனால் பிரதம நீதியரசர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக சட்டத்தரணிகளுடன் கைலாகு கொடுத்ததும், சட்டத்தரணிகள் பிரதம நீதியரசருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளாகும்.
முன்னாள் பிரதம நீதியரசர்களுக்கு எதிராக கையொப்பம் இட்டவர்கள் தற்போதைய பிரதம நீதியரசரோடு இணைந்திருப்பது கேலிக்கூத்தாகும். பிரதம நீதியரசர் குறித்த மக்களின் நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. அமுலிலுள்ள சட்டத்துக்கு அமைவாகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் தவறு இருந்தால் அதனை பாராளுமன்ற எம்.பிக்களின் பங்களிப்புடன் திருத்த முடியும் என்றார்.

ad

ad