புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012


யாழ். புத்தூர் வடக்கில் வசிக்கும் முகுந்தன் என்ற ஈபிடிபி உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்ய கனடாவில் இருந்து சென்ற தமிழ்ப்பெண்  இனந்தெரியாத நபர்களினால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் குறித்த பெண் புத்தூர் வடக்கில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:
கொழும்பை சொந்த இடமாகக் கொண்ட கலைமகள் (வயது – 30)  கடந்த 10 வருடங்களாக கனடாவில் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். இவரின் தாய், தந்தை 12 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற விபத்தொன்றில் இறந்ததையடுத்து தனியாக இருந்த கலைமகள் கனடா சென்று உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், யாழ். புத்தூர் வடக்கில் வசிக்கும் முகுந்தன் என்பவரோடு ‘பேஸ்புக்’ வழியாக சில வருடங்களுக்கு முன்னர் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட கலைமகள் கடந்த வாரம் கனடாவில் இருந்து புத்தூர் சென்றுள்ளார்.
முகுந்தன் ஈ.பி.டி.பி எனப்படும் அரச ஆதரவு ஆயுதக்குழுவின் உறுப்பினராவார். முகுந்தனை திருமணம் செய்யச் சென்ற கலைமகளுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் திருமணத்தை செய்து வைக்க உறவினர்கள் தீர்மானித்திருந்தனர்.
புத்தூர் வடக்கில்  கலைமகள் தங்கியிருந்த வீட்டில் இருந்த உறவினர்கள் கொழும்பு சென்றுள்ளதால் அவர் இரவு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், கலைமகள் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கலைமகளின் கழுத்தில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுகின்றன எனவும், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயுள்ளன எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளன எனவும் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இனந்தெரியாத நபர்களின் கத்திக்குத்துக்கு இலக்கான கலைமகள் பின்னர் அவர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிறிலங்கா பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் கலைமகள் அணிந்திருந்த தங்க நகைககள், வீட்டுப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பிலும் சிறிலங்கா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் பின்னரே இந்தக் கொலையின் பின்னணியில் திருடர்களா? அல்லது சதிகாரர்களா? எனத் தெரியவரும் என புத்தூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அதேவேளை, கலைமகளை திருமணம் செய்ய இருந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் முகுந்தனைக் கைது செய்த சிறிலங்கா பொலிஸார் அவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ad

ad