புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012

ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது ஏன்?: சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் விளக்கம்
லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. இந்த ஓட்டெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 


ஓட்டெடுப்பு தொடங்குவதற்கு முன், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி உறுப்பினர்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்களும் அதில் கலந்து கொள்ளாமல் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை இந்த கட்சிகள் எதிர்க்கின்ற போதிலும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன. ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பது பற்றி முலாயம் சிங் பின்னர் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவின் மூலம் 20 கோடி விவசாயிகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் 5 கோடி சிறு வணிகர்களின் நலன்களை மத்திய அரசு தியாகம் செய்து உள்ளது. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

அப்படியானால் தீர்மானத்துக்கு ஆதரவாக சமாஜ்வாடி உறுப்பினர்கள் வாக்கு அளிக்காமல் ஓட்டெடுப்பை புறக்கணித்தது ஏன்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஓட்டெடுப்பை புறக்கணிப்பது என்று கட்சி எடுத்த முடிவின்படி வெளிநடப்பு செய்தோம் என்றார்.

மத்திய அரசுக்கு உதவி செய்யும் நோக்கத்தின் தானே நீங்கள் இந்த முடிவை எடுத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, கட்சி எடுத்த முடிவின்படி நாங்கள் நடந்து கொண்டு உள்ளோம் என்று அவர் பதில் அளித்தார்.

ad

ad