புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 டிச., 2012


விரைவான விடுதலையை எதிர்பார்த்து பல்கலைக்கழக மாணவர் காத்திருப்பு


“விடுதலையை விரைவு படுத்துங்கள்” என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது என்றும் பேராசிரியர் கூறினார்.
தமது விடுதலை விரைவு படுத்தப்படுவதை எதிர் பார்த்தபடி
பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் நால்வரும் வெலிக்கந்தவை அடுத்துள்ள கந்தன்கடுவ என்ற இடத்திலுள்ள திறந்தவெளி தடுப்பு முகாமில் காத்திருக்கின்றனர் என்று அவர்களை நேற்று நேரில் பார்வையிட்ட விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே.கந்தசாமி “உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தார்.
பயங்கரவாத விசார ணைப் பிரிவுப் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டு வெலிக்கந்தவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் அவர்களின் பெற்றோரும், பல்கலைக்கழக பேராசிரியர்களும்பார்வையிட்டுள்ளனர்.
இரண்டு மணி நேரம் மாணவர்களுடன் இருப்பதற்குத் தாம் அனுமதிக்கப்பட்டனர் என்று பெற்றோரும் பேராசிரியர்களும் தெரிவித்தனர்.
பேராசிரியர்களான புஸ்பரட்ணம், எஸ். ஸ்ரீ சற்குணராஜா மற்றும் விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கே. கந்தசாமி ஆகியோரே மாணவர்களைப் பார்வையிட்டனர். மாணவர்களின் பெற்றோரும் அவர்களுடன் சென்றிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், செயலாளர் ப.தர்ஷானந், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த் மற்றும் விஞ்ஞான பீட மாணவன் சொலமன் ஆகியோரே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவு பொலிஸாரால் கட்டம் கட்டமாக 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிகுதி 4 மாணவர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் பட்சத்திலேயே அவர்களை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடமும் பெற்றோரிடமும் அதிகாரிகளால் கூறப்பட்டுள்ளது.

ad

ad