புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2012


பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.


அப்போது மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினோம்.

அதற்கு 1999 மற்றும் 2004 வரை பாஜகவின் கூட்டணியில் இருந்தபோது, பாஜகவின் மதவாதம் கருணாநிதிக்குத் தெரியவில்லையா என்று கேள்வி கேட்கின்றனர்.

குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கிய பிறகே, பாஜக கூட்டணியில் பங்கேற்கும் முடிவினை அப்போது எடுத்தோம்.

ஆனால் அந்தச் செயல்திட்டத்தில் இருந்து, பாஜக சற்று விலக முற்பட்டு, அதன் அசல் நிறத்தை வெளிக்காட்டிக் கொண்ட பிறகுதான் கூட்டணியிலிருந்து விலகினோம்.

இப்போது பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுகிறது.

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறாத காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, இலவச காப்பீடு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

அதற்கு சிட்டா அடங்கலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் விண்ணப்பங்களைப் பெற்று கூட்டுறவு வங்கிகளிடம் அணுகினால், கடன் விவகாரம் தொடர்பாக எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று விண்ணப்பங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டனர்.

இதுதான் இலவசப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றிய இப்போதைய நிலை. இனியாவது அரசு இந்தத் திட்டம் பற்றி கவனித்து நடவடிக்கை எடுக்கு முன் வருமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ad

ad