புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


இலங்கையில் சிவப்பு மழை.இந்தியாவில் மஞ்சள் மழை.பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்
அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு  மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் மஞ்சள் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுவிருத்தகிரி குப்பம் கிராமத்திலேயே மஞ்சள் மழை பெய்துள்ளது.
குறித்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்பட்ட நிலையில் திடீரென மஞ்சள் நிறத்தில் மழைத்தூறல் விழ ஆரம்பித்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மழைத்தூறலை கைகளால் துடைத்தபோது மஞ்சள் நிறத்திலான மா போன்று காணப்பட்டது.

இதனால் அச்சமடைந்த சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். மஞ்சள் தூறல் இரண்டு நிமிடம் வரை நீடித்தது. மஞ்சளாக பெய்தது அமில மழை என தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் இது தொடர்பான தகவல்களை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ad

ad