புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012


 ‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார்-டெல்லிமாணவி
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது அவருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை பலாத்காரம் செய்த கும்பல் அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளது. இதில் அவரது வயிறு மற்றும் சிறுகுடல் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவரது சிறுகுடலில் நோய் தொற்று பரவிய காரணத்தால் இதுவரை 5 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடல் பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவருக்கு 5 சதவீத சிறுகுடல் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், இதனால் அவர் இனிமேல் எவ்வித ஆகாரமும் சாப்பிட முடியாது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மாணவிக்கு நேற்று சிறிது நேரம் நினைவு திரும்பியது. அப்போது, தாய் மற்றும் சகோதரனை பார்த்து கண்ணீர் விட்டார். ‘எனக்கு வாழ ஆசையாக இருக்கிறது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்‘ என்று எழுதி காட்டினார்.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. உத்தரகண்ட் முதல்வர் ரூ. 5 லட்சம் உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மருத்துவ செலவை டெல்லி அரசு ஏற்றுக் கொள்ளும் என முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் ஜெயாபச்சனும் மாணவிக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உ.பி.மாநிலத்தை சேர்ந்தவர் என்ற வகையில் முதல்வர் அகிலேஷ் யாதவும் நிதி உதவி அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

ad

ad