புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2012

கனடாவில் உள்ளநபருடன்முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி-முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்துபுதிய தகவல்கள்வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ளநபருடன்முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 
கொலைவழக்கில்மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன்வேலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற அவரது மனைவிநளினிவேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்தம்பதியர்இருவரும், 15 நாட்களுக்குஒருமுறை சந்தித்துப் பேசிக்கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர்.
பல ஆண்டுகளாகஇவர்கள் சந்திப்பு நடந்து வந்ததுகடந்தமாதம்சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார்வேலூர்ஆண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது,முருகனிடமிருந்து கைத்தெலைபேசி ஒன்றுசிம்கார்ட்மற்றும் குறுந்தட்டுக்கள் இரண்டையும் கைப்பற்றினர்.இதை ஆய்வு செய்த போதுதிடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
முருகனிடமிருந்து கைப்பற்றியசிம்கார்டில் இருந்து,இலங்கைகனடாவுக்குஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு,அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி பேசியது தெரியவந்துள்ளது.மேலும்இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும்சென்னை பிரமுகர் ஒருவரிடம்அடிக்கடிபேசியதும் அம்பலமாகியுள்ளது.
அதோடு கைப்பற்றியகுறுந்தகடுகளை ஆய்வு செய்ததில்,இலங்கை உட்பட முக்கிய வரைபடங்கள் இருந்ததுதெரிந்ததுஇது பற்றி மத்திய அரசு உளவுத்துறையினர்,இரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.
முருகனிடம் கைப்பற்றிய தொலைபேசி குறித்த விவகாரம்,டில்லியில் உள்ள “றோ” உளவுத்துறைக்குதெரிவிக்கப்பட்டதுஇது தொடர்பாக முருகனைஇரகசியமாக கண்காணிக்கும்படியும்முருகன் - நளினிசந்திப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும்உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால்முருகன் - நளினி தம்பதியர் சந்திப்பு கடந்த,இரண்டு முறை நடக்கவில்லை என சிறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்இருவரையும் வேறு சிறைக்கு மாற்றஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் இந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ad

ad