புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 டிச., 2012


சிலாபம் முன்னேஸ்வரம் குளம் உடைப்பெடுத்ததால் அப்பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் வள்ளங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மேலும் வெள்ளப் பெருக்கு காரணமாக புத்தளம் –கொழும்பு வீதியில் சிலாபம் ஜயபிம, மற்றும் மாதம்பை பகுதிகளின் ஊடக செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைபட்டுள்ளன.

இன்று காலை கொழும்பிலிருந்த வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து பங்கதெனிய பகுதியில் வெள்ள நீரி்ல் இழுத்துச் செல்லப்பட்டு பாதையினைவிட்டு வயல் பகுதியில் புதையுண்ட நிலையில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பஸ்ஸிலிருந்த பயணிகளை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனனர்.

இதே வேளை வெள்ளப் பெருக்கால் பல பிரதேசங்களிலும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் மூலம் இடம் பெயர்ந்த மக்கள் பொது கட்டிடங்கள்,மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ad

ad