புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2012

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக மாவீரர் தின நிகழ்வினை புலம் பெயர் நாடுகளில் இருந்து நேரடியாக GTV SPV  தொலைக்காட்சி அண்மையில் வழங்கியிருந்தது.


இது எம் தேசத்துக்காக எம் இனத்துக்காக தம் உயிரைக்  கொடையாக வழங்கிய மாவீரர் செல்வங்களின் தியாகத்திற்குக்  கிடைத்த கெளரவமாகும். மாவீரர்களை ஒரு தனிப்பட்ட மனிதரோ ஒரு பிரதேசமோ உரிமை கொண்டாட முடியாது. மாவீரர்கள் ஒட்டு மொத்த தமிழ்
இனத்துக்குமான சொத்து. மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சியின் வடிவம். எம் நெஞ்சில் மாவீர செல்வங்களின் நினைவுகள் இருக்கும் மட்டும் தமிழீழத்தின் விடியலை யாராலும் தடுத்து விட முடியாது. இரண்டாயிரம் வருடங்களுக்குப்  பிறகு தமிழினம் மீண்டும் வீர மறவர்களால் புது எழுச்சி வரலாற்றைப்  படைத்திருக்கிறது.
ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு அரசின் வெளியுறவு கொள்கையிலேயே மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதும் ஒரு ஊடகம் நினைத்தால் ஒரு இன அழிவுக்கே வித்திடலாம் என்பதையும் கடந்த கால வரலாறுகள் காட்டி நிற்கின்றன.
எனவே GTV SPV , புதிய தலை முறை மற்றும் ஏனைய ஊடகங்கள் தமிழின விடிவுக்கு தொடர்ந்தும் இதே பங்களிப்பினை செய்யும் என தமிழினம் எதிர்ப் பார்க்கிறது. தமிழர் தேசத்தை அடைய வரலாற்றுப்பாதையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் தொலைக்காட்சியே உலக தமிழர்களின் தொலைக்காட்சி என மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்.
GTV SPV யின் மாவீரர் தின ஒளிபரப்பு இவ் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் தொலைக்காட்சியாக மட்டுமில்லாமல்  தமிழினத்துக்கான தொலைக்காட்சியாக மலரட்டும்.
நன்றி

ad

ad