புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 

 
பரிஸ் மாநகர முதல்வர்  Bertrand Delanoë (PS), Ile-de-France பிரந்தியத்தின் தலைவர் Paul Huchon (PS)  மற்றும் பல நகரசபை உறுப்பினர்கள் சில UMP கட்சி நகரசபை உறுப்பினர்கள் கலந்து  கொண்டு இந்த வீதித் தொடருந்தைத் தொடங்கி வைத்தனர். இந்த வீதித்தொடருந்து பரிசின் கிழக்குப் பகுதியையும் வடக்குப் பகுதியையும் இணைத்து வைக்கின்றது. T3 தினமும் 3 இலட்சம் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் என நம்புவதாக பரிஸ் மாநகரசபை முதல்வர் தெரிவித்தார். "பரிசின் வட பகுதிக்கு வரும் மக்களில் 60 சதவீதமான மக்கள் பரிசின் புறநகர்ப் பகுதியிலிருந்து வருபர்கள். இந்தப் பிரயாணம் இலகுவாக்கப்பட்டதுடன் அழகுபடுத்தப்பட்டும் உள்ளது. அழகியல் என்பது மேற்தட்டு மக்களுக்கு உரியது மட்டுமல்ல. அதை அனைவருக்கும் வழங்க விரும்புகின்றோம். பரிஸ் மாநகரம் இந்த வீதித் தொடருந்துப் போக்குவரத்திற்கான வீதிச் செப்பனிடலுக்கு மட்டும் 150 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. இதில் போக்குவரத்தை அழகுபடுத்தவதற்காக 11 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது " என்று தொடர்ந்தார் பரிஸ் மாநகரசபை நகரபிதா. 
 
 
 
 
 
 
 
 
வீதித் தொடருந்துகளிற்கிடையே இணைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டம் பற்றி இவரிடம் வினவியபோது "  Porte d'Asnières (nord-ouest) வரையான நீட்டிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது 2017 இல் முடிவடையும். மிகுதியான திட்டங்களுக்கான ஆலோசனைகளை நானே சொல்லக்கூடாது. 2014ம் ஆண்டு இடம்பெற உள்ள மாநகரசபைத் தேர்தலுக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் வேட்பாளர்களும் தற்போதைய மாகரசபை உறுப்பினர்களும் தமது பகுதிக்குத் தேவையான போக்குவரத்திற்கான ஆலோசனைகளைக் கூறட்டும். அவை பரிசீலிக்ப்படும் "என்று பரிஸ் மாநகரசபை முதல்வர் கூறியுள்ளார். 
 
 
 
 
 
T3ன் இரண்டாம் பகுதி, வீதித் தொடருந்தின் (TRAM) செலவீனத்தைத் தவிர்த்து 800 மில்லியன் யூரோ செலவில் உருவாக்கப்பட்டுள்து. இதில் 580 மில்லியனை  நகரமும் 220 மில்லியனை  மாகாணமும் பொறுப்பேற்றுள்ளது. இந்த T3 இன்  இரண்டாவது புதிய பகுதியில் மட்டும் தினமும் ஒரு இலட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பயணிப்பார்கள் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

ad

ad