புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 100 பேர் காணவில்லை
ஆஸ்திரேலியாவின் தீவு மாகாணமான டாஸ்மானியாவில் கடுமையான வெயில் தாக்கிவருகிறது. 41 டிகிரி சென்டிகிரேட்டுக்கு மேல் அங்கு வெப்பநிலை நிலவுகிறது. இதனால் இங்குள்ள காட்டில் 10-க்கு மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்து
எரிந்து வருகிறது. 

மளமள பரவிய இந்த காட்டித்தீ அருகில் உள்ள வீடுகளை தீக்கிரையாக்கியது. உடனே அப்பகுதி வீடுகளில் இருந்த 3000 பேரை மீட்புபடையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். பெரும்பான்மையான மக்கள் அவசர கால மையங்களில் விடப்பட்டனர்.

ஆங்காங்கே ஒரு சில உடல்கள் எரிந்த நிலையில் கிடக்கின்றன. இருந்தும் அப்பகுதியில் இருந்த 100 பேர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 

அடுத்த வாரங்களில் நாடு முழுவதும் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 வருடங்களுக்கு முன் விக்டோரியாவில் நடந்த பிளாக் சாட்டர்டே என்ற பெரும் தீ விபத்தில் 173 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad