புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013




இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 103 தமிழ் யுவதிகள் ஒருவாரத்திற்கு கொழும்புப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக நாளை கொழும்புக்கு செல்லவுள்ளனர்.
நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரையான ஒரு வார காலம் கொழும்பில் தங்கியிருந்து தமிழ் யுவதிகள் நாளை மறுநாள் 8ம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இராணுவப் பேச்சாளர்
பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர் கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வருவது இதுவே முதற்தடவையாகும்.
தமிழ் யுவதிகள் ஒருவார கால சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதேசங்கள் தொடர்பாக இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரவிபிரிய தகவல் தருகையில்,  நாளை  கொழும்பை வந்தடையும் அவர்கள் முதலில் தமது கல்விச் சுற்றுலாவை ஆரம்பிக்கவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளுள் சிலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றதனால் கடந்த மாதம் அவர்களை திருகோணமலைக்கு சுற்றுலாக்கு அழைத்துச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் திருகோணமலைக்கு சுற்றுலா சென்றவேளை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள்

ad

ad