புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜன., 2013


சிராணி பண்டாரநாயக்க 15ம் திகதி பதவி விலக்கப்படுவார்!சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராகிறார்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்படி அரசாங்கத்துக்கு தற்போது விசுவாசமாக இருக்கும் சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இவர் மாத்திரமே தற்போது வெளியேற்றப்படவிருக்கும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அல்லது சிராணி திலகவர்த்தன ஆகியோரில் ஒருவர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் பிரதம நீதியரசராக வரும் வாரங்களில் நியமிக்கப்படுவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சிராணி பண்டாரநாயக்க எதிர்வரும் 15 ம் திகதியன்று பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஜனாதிபதியினால் நீக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad