புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை 

காரைக்குடி:சைக்கிள் ஓட்டத் தெரியாமல் 15 ஆண்டுகளாக உருட்டியே "டீ' விற்று தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.காரைக்குடி சேர்வார் ஊரணியை சேர்ந்தவர் லூர்துசாமி, 55. கடந்த 15 ஆண்டுகளாக தனது சைக்கிளை நடமாடும்
"டீ' கடையாக மாற்றி வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து சைக்கிளை உருட்ட துவங்கும் இவர் காரைக்குடி மட்டுமின்றி கோவிலூர், மானகிரி, நாச்சியாபுரம், பள்ளத்தூர், கானாடுகாத்தான், புதுவயல் என ஒரு நாளைக்கு குறைந்தது 40 கி.மீ., தூரமாவது நடந்தே பயணிப்பது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சுடச்சுட ஏலக்காய் "டீ' ஸ்பெஷல்: இவரது நடமாடும் சைக்கிள் பின்புறத்தில் "ஸ்டவ்' , பால்பாக்கெட், சீனி, பாத்திரங்கள், "டீ' கப்கள், தண்ணீர் நிரம்பிய வாலி எப்போதும் தயார் நிலையில் இருக்கும். சைக்கிள் முன்பு தொங்கவிடப்பட்டுள்ள துணி பைகளில் குளியல் மற்றும் சலவை சோப்,ஷாம்பு, சீப்பு, பவுடர் டப்பா, முகம்பார்க்கும் கண்ணாடி,பீடி, சுருட்டு, சிகரெட், புகையிலை, முறுக்கு, வடை, மிட்டாய், மிக்சர் போன்றவை இருக்கும். இவரின் "ஸ்பெஷல்' உடனுக்குடன் சுடச்சுட ஏலக்காய் "டீ' போட்டு தருவது தான்.

அவரிடம் விசாரித்ததில், "" வறுமையில் வசிக்கும் எனக்கு வாடகை கொடுத்து கடை நடத்த முடியாது. "டீ' கடையில் வேலை பார்த்த அனுபவத்தை கொண்டு அத்தொழிலையே முழுநேர தொழிலாக செய்ய முடிவெடுத்தேன். இதன் விளைவாக தற்போது சைக்கிளில் கடந்த 15 ஆண்டுகளாக நடமாடும் "டீ' கடை வைத்துள்ளேன். தினமும் 40 கி.மீ., தூரம் பயணிப்பேன்.இத்தொழில் மூலம் நாளொன்றுக்கு ரூ. 200 வருமானம் கிடைக்கிறது. இது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. எனக்கு இதுநாள் வரை சைக்கிள் ஓட்டத் தெரியாது என ஒரு "குண்டை' தூக்கி நம்மிடம் போட்டு, சைக்கிளை இடத்தை விட்டு உருட்ட துவங்கினார்.

ad

ad