புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2013



மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க 16 நிமிடங்களே ஆனது! டெல்லி போலீஸ் பதில்!
டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பேருந்தில் இருந்து அந்த மாணவியும், அவரது ஆண் நண்பரையும் அந்த கும்பல் தூக்கி வீசியது.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பேட்டி கண்டு வெளியிட்டது. இதில், ஓடிய பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பின்னர் சுமார் 25 நிமிடங்கள் வரை சாலையில் உயிருக்கு போராடினோம். பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை ஓரத்தில் நிர்வாணமாக கிடந்
த எங்களை வேடிக்கை பார்த்தனர். இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என போலீசார் ஆலோசனை நடத்தினர். இதனால் 45 நிமிடங்கள் விரயமானது.
அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழி குறித்து மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு செல்லாமல், நீண்ட தூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு அந்த நபர் கூறியுள்ளார்.
மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் மீது, மாணவியின் நண்பர் கூறிய குற்றச்சாட்டுக்களை டில்லி போலீசார் மறுத்துள்ளனர். 
இது குறித்து டெல்லி போலீசார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், 
சம்பவம் நடந்த அன்று, மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க 16 நிமிடங்களே ஆனது. தாமதம் ஏற்படவில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது. போலீஸ் ரோந்து வாகனங்கள் விரைந்து சென்றன. எல்லை தொடர்பாக போலீசார் இடையே மோதல் ஏற்படவில்லை. போலீசார் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற இது சரியான நேரமல்ல என கூறினர்.

ad

ad