புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


தமிழகத்தில் 2 அரசு பொறியியல், 10 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்: ஜெயலலிதா உத்தரவு

இதன் அடிப்படையில், பள்ளிப்படிப்புக்குப் பிறகு கிராமப்புற மாணவ, மாணவியர்கள், தங்கள் கல்வியினை நிறுத்திவிடாமல் தொடர்ந்து உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் துவக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்ற 2011-12 ஆம் ஆண்டில் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன.  இதுவன்றி தேனி மாவட்டம், போடி நாயக்கனூரில் 2012-13 ஆம் ஆண்டு முதல் அரசு பொறியியல் கல்லூரி துவக்க ஆணையிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி வட்டம் செட்டிக்கரையிலும், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம் செங்கிப்பட்டியிலும் என இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இக்கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், மாணவ, மாணவியர் விடுதி, நூலகம்,ஆய்வுக் கூடங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை நிறைவேற்ற ஒவ்வொரு கல்லூரிக்கும் 89 கோடியே 90 லட்சம் ரூபாய் என 179 கோடியே 80 லட்சம் ரூபாய் நிர்வாக ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதற்கட்டமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் 14 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரியலூர் மாவட்டம் அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, மதுரை மாவட்டம் செக்கானூரனி ஆகிய 10 இடங்களில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவக்குவதற்கு  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 10 பலவகை  தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டுமான பணிகளுக்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் 13.30 கோடி ரூபாய் வீதம் பத்து கல்லூரிகளுக்கு மொத்தம் 133 கோடி ரூபாய் நிர்வாக ஒதுக்கீடு செய்தும், மற்றும் அத்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தேவையான ஆய்வகக் கருவிகள், கணிப்பொறிகள், அறைகலன்கள் மற்றும் நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்கள் ஆகியவற்றிற்கான செலவினத்திற்கு ஒரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 50 லட்சம் ரூபாய்  வீதம், பத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்குடு செய்தும், மொத்தம் 138 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி தற்பொழுது காஞ்சிபுரம் பக்தவச்சலம் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கென சொந்தமாக கட்டடம் கட்ட காஞ்சிபுரம் வட்டம், காரப்பேட்டை கிராமத்தில் 4.32.0 ஹெக்டேர் புன்செய் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.  தெரிவு செய்யப்பட்ட இந்த இடத்தில், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்காக 20 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், ஏழை எளிய மாணவ, மாணவியர்களும் பொறியியல் பட்டதாரிகளாவதற்கு வழிவகை செய்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ad

ad