புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


'திவிநெகும' சபையில் நிறைவேற்றம்

  • 2/3 பெரும்பான்மை வாக்குகள்
  • ஆதரவு 160, எதிர் 53
மாகாண சபைகளுக்கும் அப்பால் சென்று மக்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பசில்
‘திவிநெகும’ வாழ்வெழுச்சி சட்டமூலம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்
திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய 107 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முன்னணி (ஜே.வி.பி) ஆகியன சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தன. அதேநேரம் அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்பன சட்டமூலத்திற்கு ஆதரவளித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் 6 எம். பிக்களும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் 2 எம்.பிக்களும் நேற்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
வாக்கெடுப்பின் பின்பு சபை குழு நிலையில் கூடியது. இதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பின ர்களின் வேண்டுகோளுக்கமைய சபா நாயகர் மீண்டும் வாக்கெடுப்பு நடத்து வதற்கு முடிவுசெய்து, உறுப்பினர்கள் பெயர் குறிப்பிட்டு வாக்களித்தனர்.
திருத்தம் நிராகரிப்பு
இங்கு பல திருத்தங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டபோதும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கொண்டுவந்த திருத்தம் சபை யினரால் நிராகரிக்கப்பட்டது. விஜித ஹேரத்தினுடைய திருத்தம் வாக்கெ டுப்புக்கு விடப்பட்டபோது 111 மேல திக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை க்கு அமைய திவிநெகும சட்டமூலம் சகல நிலைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் சபையில் அங்கீகாரம் பெற்றது.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய திருத்தங்கள் குழுநிலையில் அங்கீகரிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத் தப்பட்டே சகல திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று 8ஆம் திகதி பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
சபையின் வழமையான நடவடிக்கையின் பின்னர் திவிநெகும சட்டமூலம் தொடர்பான இராண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.
ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.
திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் ஓய்வூதியம் பெறுகின்ற அரசசேவை உத்தியோகத்தர்களாக மாற்றம் பெறுவர் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
திவிநெகு சட்டமூலத்தை ‘வாழ்வின் எழுச்சி’ என தமிழ் மொழியில் குறிப்பிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த சட்டமூலத்தை தமிழில் ‘வாழ்வின் எழுச்சி’ என்றழைப்பதற்காக அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்றும் கூறினார். அத்துடன் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் வாழ்வில் எழுச்சியை இந்த திவிநெகும சட்டமூலம் ஏற்படுத்தப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் போசும்போது, திவிநெகும சட்டமூலத்தில் சில திருத்தங்கள் முன்வைத்ததாகவும், இது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருந்தத ¡கவும் குறிப்பிட்டார்.
சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர பேசும் போது, திவிநெகும சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் ஊடாக மாகாண அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக எண்ணுவது தவறு என்று குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுகையில், அதிகாரப் பகிர்வின் ஒரு அங்கமாகவே 13வது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் திவிநெகும சட்டமூலம் 13வது திருத்தத்தையும் பறித்துச் செல்லும் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் பேசும்போது, திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளன.
இதனால் நாம் இந்தத் திட்டத்தை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். எந்தவகையிலும் மாகாண மற்றும் பிரதேச சபைகளினது அதிகாரங்களை பாதித்துவிடலாம் என்று எண்ணத் தேவையில்லை. மாகாணசபை மற்றும் பிரதேச சபையினூடாக தோட்ட மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடவில்லை. அதேபோன்று தென்பகுதி அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய மாகாண அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை என்ற மூன்றும் ஒன்றிணைந்துதான் இந்த திவிநெகும சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அதிகாரசபைகளும் அமுலில் இருந்த போதும் தோட்ட மக்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. எனினும், இந்த திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளன என்றார்.
திவிநெகும சட்டமூலம் தொடர்பான விவாதத்தை சபையில் முடித்துவைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரையாற்றினார். தனது உரையில் திவிநெகும சட்டத்தினுடைய நன்மை. அதனால் சமுர்த்தி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பெறப்போகும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர், மாகாண சபைகளின் எந்த அதிகாரமும் பறிக்கப்படுவதாக ஒரு எழுத்தேனும் காண்பிக்க முடியுமா என்று எதிர்க்கட்சியினரைப் பார்த்து சவால் விடுத்தார்.
அதேநேரம், மாகாண சபைகளுக்கு அப்பாலும் சென்று மக்களுக்கான அதிகார த்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் வழங்கியுள்ளது என்பதையும் நாம் ஆணித்தரமாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம். இந்தச் சட்டத்தின் மூலம் 27,000 சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வூதியம் பெறும் அரச உத்தியோகத்தர்களாக மாற்றமடைகிறார்கள் என்பதை நாம் தெளிவாக உறுதிப்படுத்து கின்றோம் என்றார்.

ad

ad