புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013


கனடாவின் முன்னணி தமிழ் ஊடக நிறுவனங்களில் ஒன்றான தமிழர் செந்தாமரை குழுமம் 24 மணி நேரமும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வாரி வழங்கக் கூடிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சானல் ஒன்றினை புதிதாக துவங்கியுள்ளார்கள். 
 
 TET ( Tamil Entertrainmaent Television ) என பெயரிடப்பட்டுள்ள இந்த சானலுக்கென  மிக விசாலமான இட வசதியுடன் கூடிய பிரமாண்டமான தொலைகாட்சி அலுவலகமும் ஸ்காபுறோவில் உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய முன்னணி தொலைகாட்சி ஊடகங்களில் ஒன்றான ராஜ் ரி.வியுடன் இணைந்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கனடியத் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் வழங்க TET முடிவு செய்துள்ளது. 
 
அறிமுகச் சலுகையாக எதிர்வரும் ஜனவரி மாதம் முழுவதும்  தமிழ் எண்டர்டெயின்மெண்ட் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் அனைத்தையும்  BELL FIBE TV யில் மட்டும் சானல் எண் 842 இல் இலவசமாகவே மக்கள் கண்டு மகிழலாம். 
 
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் BELL FIBE மற்றும் Rogers ரி.வியில் TET சானலைக் காண  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் மாதமொன்றிற்கு 5 டொலர்கள் மட்டுமே என TET சானல் அதிபரும் முதன்மை செயல் அதிகாரியுமான பிரேம் அரசரத்னம் கூறினார். 
 
வட அமெரிக்காவிலேயே 24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே தரக்கூடிய  உயர் தொழில்நுட்பத்துடன் கூட முதல் சானல் TET என்பது குறிப்பிடத்தக்கது. இத் தொலைகாட்சி குறித்த மேலதிக விவரங்களுக்கு   1866 797 8686 என்ற எண்ணைத்  தொடர்பு கொள்ளலாம்.

ad

ad