புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2013


 28-ந்தேதி நிஜ க்ளைமாக்ஸ்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது கமல் தரப்பில் சீனியர் அட்வகேட் பி.எஸ்.ராமன், இஸ்லாமியர்கள் அமைப்பு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகினர்.

""பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒரே சமயத்தில் நாளை (25-ந்தேதி) 500 தியேட்டர்களில் படம் ரிலீஸாகவுள்ளது. மலேசியாவில் இன்றும், சிங்கப்பூரில் நாளையும் ரிலீசாகிறது.

உள்துறை செயலாளரிடம் மனுதாரர்கள் தரப்பில் மாநிலம் முழுவதும் தடைகோரி மனு கொடுத்து ஆர்டரும் பெற்றுள்ளனர். இதில் உள்நோக்கசா இருக்கிறது. ஒருநாள் படத்தை தடைசெய்தாலும் அது தற்கொலைக்கு சமமானது'' என்று வாதிட்டார் பி.எஸ்.ராமன்.

அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனோ, ""இந்தப்படம் வெளியிடப்பட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் அபாயம் உள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் 15 நாட்களுக்கு ரிலீஸ் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது'' என்றார். அப்போது நீதிபதி கே.வெங்கட்ராமன், "படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் உள்ளதாக யார் சொன்னது?' என்று கேள்வியெழுப்பினார்.

அட்வகேட் ஜெனரல், ""சர்ச்சைக்குரிய படம் என்று புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. படம் முழுக்க இப்படியேதான் உள்ளது'' என்றபோது குறுக்கிட்ட நீதிபதி, "இப்படி பேசக்கூடாது படத்தை நீங்கள் பார்த்தீர்களா?' என்றவர், வழக்கறிஞர் சங்கரசுப்புவைப் பார்த்து ""படம் வரட்டும். மூன்று நாட்கள் ரிலீஸ் செய்யலாம். திங்கட்கிழமை வாருங்கள். அதுவரை உங்களால் ஏதும் அசம்பாவிதம் நடக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியுமா?'' என்று கேட்க, சங்கரசுப்பு "அப்படி தரமுடியாது' என்று மறுத்துவிட்டார்.

கமல் ரசிகரும் வக்கீலுமான ராஜசேகரன், ""விஸ்வரூபம் படத்துக்கு எந்த சாயமும் பூச வேண்டாம். படத்தை குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்து ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் செய்யுங்கள்'' என்று வாதிட்டார்.

இன்னொரு வக்கீலான ஸ்டாலின், ""ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி வைத்துவிட்டனர். முன்பதிவு எல்லாம் முடிந்த நிலையில் விஸ்வரூபத்துக்கு தடை போடக் கூடாது'' என்றார்.

இறுதியாக நீதிபதி வெங்கட்ராமன், "இந்தப் படத்தை 26-ந்தேதி பார்த்த பின்னர் 28-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன்'' என்றார்.

விஸ்வரூபம் படத்தை நீதிபதி வெங்கட்ராமன், ""அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், விஸ்வரூபம் படத்தயாரிப்புக் குழு சார்பில் இருவர், வழக்கு தொடுத்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இருவர், இருதரப்பு வழக்கறிஞர்கள் வருகிற 26-ந்தேதி காலை 11 மணிக்கு பார்த்த பின்னர்தான் அடுத்த கட்டம் நோக்கி விஸ்வரூபம் நகருமா, நகராதா என தெரியவரும்'' என்கிறார்கள் கோர்ட் வட்டாரத்தில்.

ad

ad