புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2013

28,000 கோடியா? என வாயைப் பிளந்த மீடியாக்கள் அது ஸ்பெக்ட்ரம் பணம் என எந்தவித அரசியல் தொடர்புமில்லாத ராம      லிங்கத்தை வைத்து கதகளி ஆடின.
டந்த டிசம்பர் 31-ந்தேதி இரவு. இந்திய வருமானவரித் துறையினர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறையில் உள்ள ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தபோது இந்தியா வே அதிர்ந்து போனது. அந்த வீட்டுக்காரரின் உரிமையாளர் பெயர் ராமலிங்கம்.
நக்கீரன் நன்றி 

இந்தியாவின் அனைத்து மீடியாக் களுக்கும் தலையைப் பிய்க்க வைத்த பெயர் அது. இந்திய ரூபாயின் மதிப்பில் 28,000 கோடி ரூபாய்க்கான அமெரிக்க கருவூலப் பத்திரமிருப்பதாக வந்த தகவலின் பேரிலேயே அவ்வீட்டுக்குள் ரெய்டு போன ஐ.டி.யினர் ராமலிங்கத்திடமிருந்து சில அமெரிக்க பாண்டு பேப்பர்களையும், 5,500 ரூபாயையும் எடுத்துக் கொண்டு போக, அனைத்து மீடியாக்களும் அவர் வீட்டு முன்னே குவிந்து விட்டன.



ராமலிங்கமும் ஐ.டி.யிலிருந்து வந்தவர் களிடம் "நான் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்' என்று மட்டுமே சொன்னார். சாதாரண ஒரு கடலை வியாபாரி யான ராமலிங்கம்... உண்மையிலேயே இவ்வளவு கோடி ரூபாய்க்கு சொந்தக்காரரா? அதை எப் படி சம்பாதித்தார்? உண்மையிலேயே கைப் பற்றப்பட்ட அமெரிக்க பாண்டுகள் உண்மை யானவையா? அவர் வேறொருவருக்கான பினாமியா? என்ற கேள்விகளுக்கெல்லாம்...

"நான் நேர்மையா சம்பாதிச்சவன். நான் வருமான வரித்துறையை ஏமாற்ற வில்லை. அந்த அமெரிக்க பாண்டுகள் உண்மையானவை. நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவனுமில்லை. யாருடைய பினாமியுமில்லை' என அடித்துச் சொன்னார் மீடியாக்களிடம்.

சென்னையில் வருமான வரித்துறையினர் அலுவலகத்தில் கடந்த 4-ந்தேதி ஆஜரான ராமலிங்கம் ஐ.டி.யினரின் 12 மணி நேரக் கேள்விகளுக்கும் அதே பதிலளித்துவிட்டு திரும்பியிருக்கிறார். 

இந்நிலையில் அவரை நாம் வீட்டில் சந்தித்தபோது... ""என்ன வேணாலும் கேளுங்க?'' என்றவரிடம் ""அது ஸ்பெக்ட் ரம் பணம்'' என்கிறார்களே...? என்றவரிடம் ""அது ஸ்பெக்ட்ரம் பணமா அப்படீன்னா?'' என கேள்வி எழுப்பியவரிடம்...


""உங்களிடமிருந்த அமெரிக்க பாண்டு பத்திரங்கள் எங்கிருந்து வாங்கினீர்கள்?'' ""நான் எழுபது நாடுகளுக்கும் மேலாக போயி ருக்கிறேன். என் பிரேசில் நாட்டு நண்பர் டேனியல் என்பவரிடம் அந்தக் கடன் பத்திரங்களை நான் வாங்கினேன்'' என்றவரிடம்...

""உங்களிடமிருந்த அமெரிக்க பாண்டுகள் போலியானவை என வருமானவரித்துறையினர் சந்தேகிக்கிறார்களே'' என கேட்க... ""ஒரு சீதையை ராமன்கள் சந்தேகிக்கிறார்கள். நான் தீயில் நடந்த சீதையைப் போல எந்தவித அசம்பாவிதமுமின்றி வெளியே வருவேன் எந்தப் புண்களும் ஏற்படாமல்.''

""அது சரி. உங்கள் தொழிற்பார்ட்னரும், உங்கள் மனைவியின் அண்ணனுமான தர்மராஜும் கூட நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி என்று சொல்கிறாரே...'' என்க... ""பனைமரம் சாய்ந்தால் பன்னிக்குட்டி கூட தாண்டி போகுமாம். ஏதோ ஒரு படத்தில் ராதிகா சொன்னது தான் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் சொல்வதெல்லாம் உண்மை. நான் தொண்டியில் தொடங்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு மத்திய அரசு அனுமதி தந்திருந்தால் 10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருப்பேன்.''

""அது சரிங்க. உங்களுக்கு ஏது இவ்வளவு பணம்?' "அது நான் சம்பாதித்தது அவ்வளவுதான். நான் ஐ.டி.யின் விசாரணையிலிருப்ப தால் இதற்கு மேற்கொண்டு எதுவும் பேச இயலவில்லை'' என்றார்.

ராமலிங்கத்தைப் பற்றி அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தோம். ""அவரொரு மாய மனுஷங்க. அவருக்கு யாரும் இங்கே நண்பர்கள் கிடையாது. ஆனா கடலை வியாபாரம், தவிட்டு வியாபாரம்னு பிஸினஸ் பண்ணி நஷ்டம் அடைஞ்சவரு... திடீர்னு ஒரு எண்ணெய் ஆலை வச்சு அதில் பார்ட்னராயிருந்த சகலையோட செக்குல கையெழுத்த அச்சு அசலாய்ப் போட்டு சில இலட்சங்கள எடுத் துட்டதா பிரச்சினையாகி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனாங்க.

யாரோட கையெழுத்தை யும் அச்சு அசலாப் போடுவா ருன்னு பேசிக்கிட்டாங்க. அதுக் கப்புறம் இந்த மனுஷன் இங்க அதிகமா இருக்கவே மாட் டாரு. ஃபாரின் போயிருக்கா ருன்னு பேசுவாங்க. அதுக்கப் புறம் திடீர்னு வீட்டைக் கட்டி புதுக் கார் எல்லாம் வாங்கிட் டாரு. ஆனா இந்த ஆளு இவ்வளவு கோடி ரூபாய் சம்பாதிச்சுருக்காருங்கறது நிச்சயமா எங்களால நம்பவே முடியலை. ஆனா அந்த ஆளு ஒரு கிரிமினல்ங் கறது மட்டும் உண்மை'' என்கிறார் கள் இராமலிங்கத்தை அறிந்தவர் கள். இராமலிங்கத்திடமிருந்த  28,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாண்டுகள் உண்மையானதுதானா என வருமான வரித்துறையினர் விசாரணை செய்து கொண்டிருக் கிற நிலையில்... இராமலிங்கத்தை வேறொரு தரப்பாய் விசாரித்த இண்டலிஜண்ட் பீரோ அதிகாரி கள்... ""ராமலிங்கத்தை நாங்க விசா ரிச்சபோது அவரு உங்ககிட்ட சொல்ற மாதிரி 70 வெளிநாடுகளுக்கு எல்லாம் போகவேயில்லை. 11 நாடுகளுக்குத்தான் போயிருக்காரு.

ராமலிங்கம் சொல்ற மாதிரி அவரு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருத்தர் மூலமா அமெரிக்க பாண்டுகள் வாங்கினேன்னு சொல் றது அனைத்தும் பொய். இந்த ராமலிங்கத்திடம் துபாயில் உள்ள ஒருவன் அமெரிக்காவில் மூடப் பட்ட ஒரு பேங்க்கின் பாண்டு களை விற்பதாக சொல்கிறான். ராமலிங்கமும் அதை வாங்குகிறார். வாங்கியதற்கு பணம் தரவில்லை. உண்மை என்னவென்றால் அந்த பாண்டே காலாவதியானது. துபாய் பார்ட்டியே ஒரு சீட்டிங் பார்ட்டி.

நம்மையே தமிழ்நாட்டுக் காரனான ராமலிங்கம் ஏமாற்றிவிட் டாரே என்று நினைத்து அவன் தான் இந்திய வருமானவரித் துறை யிடம் தப்பா போட்டுக் கொடுத்து விட்டான். அதற்குப் பிறகே இந்த ரெய்டு நடந்திருக்கிறது. ராமலிங் கம் எங்களைப் பொறுத்தவரை ஒரு டம்மி பீஸ். யோசிச்சுப் பாருங்க. எவ்வளவோ கோடிகளுக்கு சொந் தக்காரன்னு சொல்ற ஒரு மனுஷன் கிட்டயிருந்து வெறும் 5,500 ரூபாய் பணம்தான் ஐ.டி.க்கு கிடைக்குமா?'' என்கிறார்கள் இண்டலிஜண்ட் அதிகாரிகள்.

-அ.அருள்குமார்

ad

ad