புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2013


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.

ஆர்.ஆர்.எஸ்.தங்கராஜா , உபுல் ஜயசூரிய, மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்த ஆகியோரே அவ் மூவருமாவர்.
அடுத்தமாதம் 20 ஆம் திகதி இதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி தினம் நேற்றாகும்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளும் தலைவர் பதவிக்கான தங்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்னம் இறுதி நேரம் தான் போட்டியிடப்போவதில்லையென அறிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தில் மேலும் பிரிவு ஏற்படுவதை தான் விரும்பவில்லையெனவும் இதனைத் தடுப்பதற்காகவே இம்முடிவை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தற்போதைய தலைவராக விஜயதாஸ் ராஜபக்ஷ உள்ளார்.
அவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகின்றது. இரண்டாவது தடவையும் அப்பதவிக்கு அவரால் போட்டியிட முடியும்.
எனினும் தான் இரண்டாம் தடவை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
.

ad

ad