புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2013

அமைதிக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
 கொலைவெறியனே பிரிட்டிஷ்- ஈராக்கியர் கொலைக்கும் காரணமா?
சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பிரெஞ்சு காவல் துறை, ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் சுற்றுலாவுக்கு
வந்திருந்த பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற ஈராக் பொறியாளரை கொலை செய்தவனும் சுவிஸில் சில தினங்களுக்கு முன்பு தெருவில் சென்ற 3 பெண்களை கொலை செய்தவனுக்கு மற்றொருமொரு கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாநிலத்திற்கு அருகில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான ஹாட்- சேவோய் கிராமத்தின் பொலிசார், அல்- ஹில்லி குடும்பத்தாரின் கொலை விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
கொலை வெறியனிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மிகப் பழமையானதாகும். குறிப்பாக அது வரலாற்ற பழமை வாய்ந்த இராணுவ துப்பாக்கி என கூறப்படுகிறது.
இது தவிர இன்னொரு துப்பாக்கியும் இவனிடம் இருந்ததாகவும் இவை எப்படி இவனுக்கு கிடைத்தது என பொலிசார் விசாரிக்கின்றனர்.
2005ம் ஆண்டில் இவன் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே இவனிடமிருந்த துப்பாக்கி பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைதிக்கு பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் போட்ட சம்பவம் நடந்துள்ளது.
சியான் மாகாணத்திலுள்ள டைல்லோன் என்ற கிராமத்தில் சுமார் 30 வயது வாலிபர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான்.
இதில் 80 வயது மூதாட்டி உட்பட 3 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார் விரைந்து சென்று அவனை சரண் அடையும்படி கூறினர்.
ஆனால் அவன் மறுத்து அதிகாரிகளை சுட்டுவிடுவதாக மிரட்டினான்.
இதனால் பொலிசார் துப்பாக்கியால் சுட்டு அவனை மடக்கி கைது செய்தனர். இதில் அவன் காயம் அடைந்தான்.
இது தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் ஒரு மனநோயாளி என டொக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad