புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013


தாய்லாந்தில் சுற்றிவளைப்பு 45பேர் கைது!! போலி கடனட்டைகளுடன் கனேடியப் பிரஜையான தமிழரொருவர் உட்பட மூன்று தமிழர்கள் கைது!

 இந்தோனேசியா, கனடா போன்ற நாடுகளுக்கு தமது கப்பல்கள் மூலம் தமிழ்அகதிகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து தாய்லாந்தில் வைத்து மேற்படி கப்பல்களில் ஆட்க
ளை ஏற்றியனுப்பிய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தாய்லாந்து பெண்மணியைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா தாய்லாந்தின் பாங்கோக்கிலுள்ள குரும்தோன்புறி என்னுமிடத்திலிருந்து லாகோஸ்தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஞாயிறன்று மாலை தாய்லாந்து சீ.எஸ்.டீ பொலீசார் குலாம்தே என்னுமிடத்தில் அமைந்துள்ள குலாம்தே ஹோட்டலைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது ஒரு கனேடியத் தமிழர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளதுடன், அவர்கள் வசமிருந்த 104 (கடனட்டைகள்) கிறடிட் கார்ட், கிரடிட்காட் ரீடர் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கனடாப் பிரiஐயான 24வயதான சிவப்பிரியன் சிவப்பிரகாசம், 22வயதான அஜந்தன் பாலேந்திரன், 28வயதான வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்றுகாலை தாய்லாந்து பொலீஸார் சுவீசான் என்னுமிடத்திலுள்ள இந்தமறா என்ற ஊரில் நடத்திய சுற்றிவளைப்பின் போது 45இலங்கைத் தமிழர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றுகாலை கைது செய்யப்பட்ட குறித்த 45பேரில் 24பேர் 01வயது முதல் 13வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 45பேரும் விசா இல்லாதோருக்காக தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ad

ad